பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

சோலை சுந்தரபெருமாள்


“உங்க இஷ்டப்படி ரிபோர்ட் கொடுக்கணும்னா நான் எதுக்காக டாக்டராக இருக்கணும்?”

“நான் டி.எம்.ஓ.வைப் பார்த்துப் பேசிக்கிறேன். உங்க அதிஷ்டம், தண்ணி இல்லாத காட்டுக்குப் போகணும்னா போங்க...”

“நீங்க யாருன்னு நினைச்சிண்டிருக்கீங்க, இப்படி பேச?” என்று சீறினான் ரவி. .

“நான் நினைச்சிக்கிட்டிருக்கேன், சுரக்காய்க்கு உப்பு இல்லேன்னு. போய்யா தெரியும்... நானும் யாருன்னு உனக்குத் தெரியாமலேயா இருக்கப் போவுது...?”

“கேவலம். இந்த வேலைக்காக, நீ விட்டெறியப் போற காசுக்கு இந்தக் கும்பல் மாதிரி, காக்கா கணக்கா காத்திண்டிருக்கப் போறேன்னு நீ நினைச்சியா...? யு கான் ஜாலி வெல் கோ டு தி சீஃப்மினிஸ்டர் ஃபார் ஆர் ஐ கோ... நான் என் ரிப்போர்ட்டை மாத்தப் போறதில்லை... எவ்வளவு தைரியம் இருந்தா ஆஸ்பத்திரி வாசல்லியே நீ இப்படிப் பேசுவே, உனக்காக இந்த இன்ஸ்பெக்டர் பேரம் பேச வரான்... கோர்ட்லே கேஸ் வந்து ஜெயிச்சா, பத்தாயிரக் கணக்கிலே அழனுமேன்னு, சாமார்த்தியமா சமாளிக்கப் பாக்கறிங்களா?”

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: “டாக்டர்... கொஞ்சம் மரியாதையா பேகங்க...”

“என்னடா மரியாதை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு? ஒரு உசிரு உள்ளே மன்றாடிக்கிட்டு இருக்குது... எப்பொடாப்பா பஸ்ஸை ஏத்தப் போறேன்னு காத்துக் கிட்டிருந்தாப்பலே, எல்லாரும் பொணத்தைக் கொத்தித் தின்ன வந்துட்டீங்களே, படுபாவிகாளா? இதோ பாருய்யா முதலாளி... உன் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம். நான் உண்மையைச் சொல்றேன்... பஸ்ஸை ஏத்தினது நான்தான்... கோர்ட்லே கேஸ் வரட்டும்... நாட்டை நாற அடிச்சிட்டு இருக்கிற கும்பல் யார் யாருன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்? டாக்டரய்யா, வாங்க, பையனைக் கவனிச்சுக்க நான் இருக்கேன்...” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான் வேலு.