பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

சோலை சுந்தரபெருமாள்


அவனுக்குத்தான் முதலிடம். அவன் தான் பள்ளிக்கூடம் போகிறவன். தீபாவளி முடிந்து எல்லோரும் புதுச்சட்டையில் பள்ளிக்கு வருவார்கள். அவனுக்காக சட்டை தேடும்போது அதனுடைய நிறமோ தரமோ எல்லாம் அவன் பார்க்கமாட்டான். சட்டையில ‘சீல்’ இல்லாமல்தான் தேடுவான். இப்படி துணி எடுக்கிற ஒவ்வொரு தடவையும் எல்லோருக்கும் பளிச்னு தெரியும்படி வெள்ளை நிறத்தில் பெரிய பெரிய எழுத்துக்களாய் ‘சீல்’... இருக்கும். அதுவே போதும் இந்தச் சட்டையின் பிளாட்பாரப் பூர்வீகத்தைச் சொல்ல.

இந்த முறையாவது சீல் இல்லாத சட்டையாய் எடுக்கணும் என்று அவன் முடிவெடுப்பான். ஆனால் அப்படி ஒரு சட்டையே அங்கே கிடைக்காது. அளவும் அப்படித் தான். உத்தேசமா இருக்கும். அவன் அரணாக்கயிறு போட்டிருப்பது இதற்குத்தான். கால்சட்டைப் பொத்தானை அவன் போட்டுக் கொண்டதாய் நினைவில்லை. வயிறும் ஒரே நிலையில் இருக்காது. சாப்பிட்டதும் சரியாக இருக்கிற கால் சட்டை குளத்துப் பக்கம் போய் வந்தால் இடுப்புக்குக் கிழே சரியும். அரணாக்கயிற்றைக் கால்சட்டைக்கு மேல் அடிக்கடி போட்டுக் கொள்வான். அதனால் அதுவும் அறுந்துவிடும். அப்போதெல்லாம் வயிற்றை எக்கி இரண்டு கைகளாலும் கால் சட்டையின் இரண்டு பக்கத்தையும் பிடித்துக்கொண்டு இடுப்பில் இறுக்கி சொறுகி விட்டுக் கொள்வான்.

முருகேசன் இடுப்பைத் தடவிப் பார்த்தான். இப்போதும் அரணாக் கயிறு இல்லை. ‘அம்மாவிடம் சொல்லனும்' முணகிக் கொண்டே புரண்டு படுத்தான்.

‘இந்தத் தீபாவளிக்கு அப்பா டவுனுக்குப் போயிருப்பாரா? நான் இல்லாதது அப்பாவுக்கு கஷ்டமா இருந்திருக்கும் தங்கச்சிக்குப் பாவாடை வாங்கியிருப்பாரு. பட்டாசு கொளுத்தத் தங்கச்சி என்னைத் தேடும். பக்கத்து வீட்டு கோபால் இன்னேரம் வெடிச்சிக்கிட்டிருப்பான். அவனுக்குப் போட்டியா வெடிக்க முடியாமப் போச்சே, இந்த வருஷம் தான் ஆசைப்பட்ட மாதிரி பட்டாசு வாங்க முடிஞ்சுது. ஆனா அதுவும் இப்ப வெடிக்க முடியாம பஸ் ஸ்டாண்டுலே படுத்துக் கெடக்க வேண்டியிருக்கே... பேசாம அக்கா வீட்டுக்கே போயிடலாமா... வேண்டாம். அப்பா சொல்ல சங்கடப்பட்டு தான என்னை அனுப்புனாரு. அங்க அத்தானோட மொதத்தாரத்துப் புள்ளைகளும், அக்காவோட மாமியாரும் என்ன நெனைப்பாங்க.

...அக்கா எதுக்கு அழுதுச்சுன்னும் தெரியல. அம்மாகிட்ட சொல்லனும்...

தலைத் தீபாவளிக்கு பொண்ணு மாப்பிள்ளையை அழைத்துச் சீர் செய்ய அவன் அப்பா கடன் கேட்காத ஆள்