பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

சோலை சுந்தரபெருமாள்


வல்லன்னா நானும் போகமாட்டேன்னு அக்கா சொல்லுச்சு. தலை தீபாவளிக்குப் பொண்ணை மட்டும் அனுப்பப்படாதுடான்னு அவுங்க அம்மா சொல்ல, அப்படின்னா லட்சுமியும் இருக்கட்டும். அப்புறம் போய்க்கலாம்னு அத்தான் சொல்ல, சரின்னு நானும் கோவிச்சுகிறது மாதிரி புறப்பட்டு வந்துட்டேன்”

“ராத்திரியேவா பொறப்புட்டே”

அம்மா ஆதங்கப்பட்டாள்.

“ஆமாம்மா.. பஸ் கெடைக்கல. பஸ் ஸ்டாண்டுலேயே. படுத்துக்கெடந்துட்டு மொத பஸ் ஏறி வந்தேன்.”

“பஸ் இல்லேன்னா அக்கா வீட்டுக்குப் போயிருக்குறது தானேப்பா... இப்படி அனாதை மாதிரி பஸ் ஸ்டாண்டுல படுத்திருந்து வந்திருக்கியே...ங்ங

“இல்லம்மா... தலைத் தீபாவளிக்கே அழைக்க துப்பில்ல. புள்ளையை வேற இங்க அனுப்பிட்டாங்கன்னு அக்கா மாமியார் சொல்லுமோன்னுதான் போவலம்மா.”

அம்மாவுக்குத் தொண்டை அடைத்தது. குரல் தழுதழுத்தது. முருகேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு செறுமினாள். அவனுக்கு அக்கா தஞ்சாவூரில் அழுதது நினைவுக்கு வந்தது. ஆனாலும் அம்மாவிடம் சொல்லவில்லை.