பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தஞ்சைப்ரகாஷ்

ஞ்சை மானம்புச்சாவடிக்காரர். மண்ணில் தழைத்தோங்கிய பொய்க்கால்குதிரை, பொம்மலாட்டம் சரபோஜி ராஜாவின் அருங்கலைப் பொக்கிஷம் மற்றும் கவிதைப் பொழுதுகள், இலக்கிய சூழலால் அழகுப்படுத்திக் கொண்டவர்.

தி. ஜானகிராமன் , எம்.வி. வெங்கட்ராம், சுவாமிநாதஆத்ரேயன், கா.நா.க கரிச்சான்குஞ்சு போன்றோரிடையே நெருங்கி பழகி வளர்ந்த இவரது ஆரவாரம் அற்ற இலக்கிய சந்திப்புகள் பலப்பல.

க.நா. சு. வின் ‘ஞானரகத்தில்’ வந்த இவரது கவிதைகளில்- வழி காட்டும் யவன இலக்கியம் போன்ற கட்டுரைகளில் - கள்ளம், கரமுண்டார்வூடு ஆகிய நாவல்களில் எல்லாம் மின்னலின் துடிப்பாய்ப் பளிச்சிடும் வலுவான எழுத்து ஆளுமையை அறியலாம்.

மனிதனின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் சமூகம் எத்தகையப் பொறுப்பு வைக்கிறது என்ற அடிப்படையில் படைப்பிலக்கியத்தை அணுக வேண்டும் என்ற போக்குக்கு எதிர் குரல் கொடுப்பவர் வெங்கட்சாமிநாதன் - இருவரும் தஞ்சை மாவட்டத்துக்காரர் தான் - க.நா.சு போன்றவர்களின் வழித்தோன்றலான பிரகாஷின் ஒட்டுமொத்த படைப்பின் ஆளுமையை உற்று நோக்கும் போது கலை, கலைக்காகவே என்ற சித்தாந்த வெளிப்பாடுகளோடு பாலியல்தூக்கலாய் நிற்பதை உணரமுடிகிறது.