பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

267


யாராவது தடுத்தார்களா? அப்பா, அம்மா, மாமா, மாமி யாராவது தப்பு என்று சொன்னார்களா? பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே அவன் கன்னத்தைப் பிடித்து நிமிண்டுவான். வாத்தியார்கள் கூட தடுத்ததில்லை. தெருவுக்கேத் தெரியும் இது ரெண்டும் தான் “இது” ஆகப் போகிறது என்று ஊருக்குத் தெரியும் லோச்சனா யார் என்று உலகத்துக்கே தெரியும் அவன் எப்படி என்று. எல்லாமே மங்களகரமாய் எப்போதும் போலத்தான் நடந்தது. கல்லூரியில் படிக்கும்போது கூட தஞ்சாவூருக்கு ரெட்டை மாட்டு வண்டியில் மோளை மாடுகள் குதிரைகளாய் பாய அவள் கல்லூரிக் கேட்டைத் தாண்டும் போது ராகவன் என்று மாணவர்கள் அவளுக்காகவே போடுகிற கூச்சல் வண்டிக்குள் அலையடிக்கும். பித்தளை கொப்பிகள் மினுங்க ரதம் போல் அவள் வண்டி, வரும்போது காலேஜூ ஒரமாக கார்பார்க்கிங் செட்டில் நிற்கும். ராகவனின் நீல நிற அம்பாஸிடர் அவளைப் பார்த்து விழிக்கும். அவளுக்கு எத்தனை சுகமான நாட்கள் அது. எதையும் அவள் விரும்பியதேயில்லை. காரணம் அவளுக்கு எதுவும் வேண்டாம். அதனாலேயே அவள் எதையும் யாரிடமும் கேட்டதேயில்லை. ராணிக்கு யார் எதை தர முடியும்? அவள் எதை விரும்ப வேண்டும்? லோச்சனாவுக்கு என்ன இல்லை? அவளைப் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் சுற்றிலும் பெண்கள் அடேயப்பா ! என்று கண்களை அகல விரித்து வாய்மூடி கொள்வதைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். லோச்சனாவுக்கு ஆரம்பத்தில் இது புரியாது. ஏன் இப்படி எல்லாரும் தன்னைக் கண்டு ஆச்சரியப்பட்டு காலில் விழுந்தும் விழாத குறையாக வணங்கி புரண்டு விழுகிறார்கள் என்பதும் லோச்சனாவுக்குப் புரிவதேயில்லை. வெள்ளைத்தோலும், சிவப்பு சர்மமும் மஞ்சுள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய் தெரியும் பட்டுப்புடவையின் சலசலப்பும், மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது அவளுக்குப் பழக்கமாகி செறித்துப் போன விஷயம்.

காவிரியாற்றில் கொள்ளிடத்திற்கு மேற்கே வெகு தூரத்தில் ஒரு கண் திறந்ததுபோல ஒரு பசுமையான தீவுக் கிராமம்தான் இப்போது அவளுக்கு உறவு. அந்த கிராமம் அஞ்சினி. கிராமத்திலிருந்து பார்த்தால் இருபுறமும் கடல் போல் வழிவது புரியுது. அந்தக் காவிரி அவளைப் பார்த்து ஆசைப்படாது, கல்யாணம் செய்து கொள்ளாது. காலில் புரண்டு நக்காது, நகைப் பூட்டிக் கேட்காது. அலனைப் போல விட்டுவிட்டுப் போய் விடாது. போனாலும் வராது. வந்தாலும் போனது போல் இருக்காது. அவளும் இவற்றை எல்லாம் ஒத்துக்