பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

27


கிராமத்துக்குள் சென்றேன்; கொஞ்சம் ஒதுங்கி நின்ற ஒரு வீடு என்னைக் கவர்ந்திழுத்தது. அது சிறிது பாழடைந்த வீடு. “ஏழை வீட்டுக்குப் போனால்தான் நல்லது. தைரியமாகக் காலனா கொடுத்து மோர் கேட்கலாம்” என்று எண்ணியவாறு, வீட்டினருகில் சென்றேன். பெயர் “லலிதாவிலாசம்” கதவு தாளிட்டிருந்தது. வெளிச்சுவரில் ஏதேதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இராஜப் பிரதிநிதி அர்வின் பிரபுவுக்கு ஒரு நோட்டீசு: இது கண்ட ஒரு வாரத்திற்குள் நீர் நமக்கு தரவேண்டிய இரண்டு லட்சம் ரூபாயையும் அனுப்பி வைக்க வேண்டியது. இல்லாவிடில் உம்மை வேலையிலிருந்து தள்ளிவிடும்படி சிபாரிசு செய்யப்படும்.” சென்னை ஹைகோர்ட்டு நீதிபதிகளையெல்லாம் இந்தியாவிலுள்ள பற்பல இடங்களுக்கு மாற்றியிருப்பதாக மற்றோர் உத்தரவு எழுதப்பட்டிருந்தது. இடையிடையே “ஜீவரசம், ஜீவரசம்” என்று பல இடங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. “சரி! நமது கிராம வாசம் வீண் போகவில்லை. இங்கே ஏதோ வினோதம் இருக்கிறது” என்று எண்ணிக் கொண்டேன். கதவைத் தட்டினேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கப்பட்டது. முதலில் ஒரு கரும்பூனை வெளியே வந்தது. அப்புறம் ஒரு முயல்குட்டி, அப்புறம் ஒரு நாய், பின்னர் ஒரு கிழவரின் முகம் மட்டும் தெரிந்தது. பிறகு கிழவரின் உருவம் முழுதும் வெளியே வந்தது. ஆகா! எத்தனைய கிழவர்? நீண்ட வெண்ணிறத் தாடி? முழங்கால் வரை வந்த வெண்மையான மேலங்கி, கண்ணில் மூக்குக் கண்ணாடி, நெற்றியில் குங்குமம்; ஆஜானுபாகுவானத் தோற்றம். யாரோ பிரும்மஜான சங்கத்தைச் சேர்ந்த மகானாயிருக்க வேண்டுமென்றும், இங்கேத் தனிமையாக வந்து தவம் செய்கிறார் என்றும் நான் எண்ணினேன்.

“என்னப்பா! எங்கே வந்தே? என்றார். “தங்களுக்கு தொந்தரவு கொடுத்தற்காக மன்னிக்க வேண்டும். தாகமாய் இருக்கிறது. கொஞ்சம் மோர் கிடைக்குமா? என்று கேட்க வந்ததேன்” என்றேன்.

“மோர்-மோர் என்ன? மோரா? ஓகோ மோர் சர்ரி-சர்ரி உள்ளே வா” என்றார் கிழவர்.

எனக்குக் கொஞ்சம் சந்தேகம் தட்டிற்று. இருந்தாலும் உள்ளே சென்றேன். சுற்றும் முற்றும் பார்த்ததும் என் கலக்கம் அதிகரித்தது. காரணம் அவ்வளவு விசித்தரமாக சாமான்கள் அங்கே காணப்பட்டன. பழைய அலமாரி அதற்குள் கணக்கில்லாத கண்ணாடிப் புட்டிகள், ஒடிந்த மேஜை, அதன் மீது கண்ணாடிக்குழாய் முதலிய என்னென்னவோ கருவிகள், மூலைக்கு மூலை கிழிந்தப் பழையப் புத்தகங்கள், ஒரு ஜோடிப் பூனை, நாலு முயல், ஒரு நாய், எலி வலை முதலியன. கிழவர் ஒரு சட்டியிலிருந்து கொஞ்சம் மோர் ஊற்றிக் கொடுத்தார். அதை