பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

291


அவள் மனசுக்குள் எவ்வளவோ "எவ்வளவோ"... நெருப்பும், தண்ணியும் இல்லாமல் வெந்து கொண்டிருந்தன.

'சதக்'ன்னு அவள் கையில் குருவியின் எச்சம் விழுந்தது. முகத்தை சுழித்துக் கொண்டாள். வைக்கலை எடுத்து அதை வழித்து எறிந்தாள்.

"பிரி கூட போதும். குருவி எச்சம் வுட்ட எடத்த தண்ணிவுட்டு கழுவிபுடு இல்ல, அந்த எடம் பருவம் கட்டி வெந்து போயிடும்."

முத்தண்ணன் எச்சரித்ததும் மண் தோண்டியில் இருந்த தண்ணிய எடுத்துக் கழுவி கொண்டாள்.

'அது புருஷன் டீக் கடைக்காரக் குட்டியோட ஓடிப்போன அன்னிக்கு இந்த ஊரு வாயில பூந்து பொறப்பட்டு பேச வச்சுட்டுப் போனான். இத்தினி வருஷம் லோலுப்பட்டு சிரிப்பா சிரிச்சு இப்பதான் நிம்மதியா இரண்டு பருக்க திங்குது. இப்ப திரும்பவும் வந்து தொசம் கட்டி அடிக்கிறானே. பாவம் அதுதான் என்னாப் பண்ணும்?'

பாக்கியம் பட்ட இம்சையும் அல்லாட்டமும் முத்தண்ணனுக்கு மட்டும் தானே தெரியும். ஆடி வந்தா பிரிஞ்சி போயி ஆடு அடிச்சா கூடிக்கிற சனங்களுக்கு அடுத்தவங்க மனசு எப்படித் தெரியப் போவுது முத்தண்ணன் நெஞ்சுக்குள் வேதனை.

கடாவடி மாடுகளை பண்ணைக்குக் கொண்டு போய் மறித்துவிட்டு வந்த மவனை, முத்தண்ணன் கூப்பிட்டு, “இந்தப் பிரிகளைக் கட்டிக்க. நாம ரெண்டு பேரும் போய் வைக்கத் தெரப்போம். தங்கச்சி நீ போய் களத்தக் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணு".

வைக்கப் பிரிகளை கட்டிக் கொண்டு புறப்படும் போது, வெயிலின் வெக்கை தணிந்து போயிருந்தது. காத்தும் சிலுசிலுன்னு ஓடியது.

நேத்துக்கு வைக்கல தெரக்கிறதுக்குள்ள வந்த வண்டிக்காரங்க இன்னிக்கு தெரச்சு போட்டும் வரவில்லை. களத்தில் கணிசமான அளவுக்கு நெல் கிடந்தது. ஒழைச்சப் பாட்டுக்கு வீண் போயிடாம கூலி கெடைச்சிடுங்கிற தெம்பு. சந்தோஷமாய் நெல்லை அளந்து கொண்டிருந்தான்.

ஏதோ அரிசி கருக்கா கெடைக்காதாங்கிற நெனப்புல கருக்கா மூட்டையை அள்ளிப் போட்டு தூத்திக் கொண்டிருந்தாள் பாக்கியம்.

"அம்மா... அம்மா! அப்பா வந்திருக்கு வந்து பாரேன்..." மூச்சு இறைக்க ஓடிவந்த தங்கத்தின் மொகத்தில் எவ்வளவு சந்தோஷம்-? அவன் அப்பா மூஞ்சை மனசில் வரிச்சுக்கறதுக்குள்ள ஓடிப்போனவனை அம்மாவோடு சேத்து