பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

297


பொம்பளைங்க மயங்கி கீள வுளுந்துருக்காங்க. ஐயோ ஐயோ அதெல்லாம் தனிக்கதைடா சாமி. இவுரோட குருநாதரு மொட்ட வாத்தியாரு ரெண்டு பொண்டாட்டிக்காரரு. அஞ்சு புள்ளங்க வேற. மொட்ட வாத்தியாரு மட்டும் உசுரோட நல்லபடியா இருக்குற காலத்துலே நெனச்சிருந்தாருன்னா எவனோ ஒரு ராஜன் தொன்னுத்தாறு பொண்டாட்டி கட்டிக்கிட்டிருந்தாராமே. அதுமாறி கட்டிருந்துருக்கலாம்தான். அவுருதான் மனஞ்சளிச்சிப் போயி வேண்டாம்னு வுட்டுட்டாரு. பொண்டாட்டிய கட்டிகிட்டு வந்தது சேத்துக்கிட்டு வந்து கட்டிக்கிட்டதுதான்? அவுரோட வேஷம் கட்டிக்கிட்டு சந்திரமதியா ஆக்கிட்டு பண்ணிகிட்ட பொம்பள...ச்சீ... பொண்ணு அவுர வுடுவனா தொடுவனான்னு இருந்து இம்சை பண்ணில்ல கட்டிகிட்டா மனுசி. ஆங்...எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோல்ல போவுது கதை... தங்கசாமி மொட்ட வாத்தியாரப் பாத்து 'எப்டி மொட்டைன்னு ஓங்களுக்கு பேரு வந்துச் சி'ன்னு கேட்டாருல்ல. அதுக்கொண்ணும் மொட்ட வாத்தியாரு கோச்சுக்கலை. அதுல கோச்சுக்குறதுக்குதான் என்னாருக்கு?

அவுரு செத்த நேரம் மௌனமா குந்திருந்துட்டு சொன்னாரு. “அந்தக் கதைய ஏங்கேக்குற தங்கசாமி... எங்க அம்மா அப்பா வெகுநாளா கல்யாணம் ஆயி பத்துவருஷ காலமா கொளந்த இல்லாம தவிச்சி தவமா தவமிருந்து என்னப் பெத்தாங்களாம். எங்களோட கொல தெய்வம் கொரடாச்சேரிக்கும் பக்கத்துல கீரந்தங்குடி மகமாய்ய வேண்டிகிட்டு அங்கப்பெரட்டம் பெரண்டு பாடகாவடி தூக்கி பால் காவடி எடுத்து... ஓடம்பெல்லாம் ரணமாவுறாப்பல அலகு காவடி எடுத்து என்னான்ன சிகிச்சை ஆக்கிணை பண்ணி அப்றமா நா பொறந்தேனாம். ஆம்பளப்புள்ளையா பொறந்ததுல எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பரமசந்தோசம். அதுல தான் கொளந்தை இல்லாமலிருந்த பத்து வருச காலத்தப் போல பத்து வருச காலத்துக்கு ஏம்புள்ளக்கி ஓஞ்சன்னதிக்கு வந்து மொட்டப் போட்டு முடியிறக்கி காணிக்க வச்சிபுட்டு போறன்னு வேண்டிகிட்டாங்களாம் பெத்தவங்க. முடி மொளக்கிறதும், மொட்டையடிக்கிறதும்ன்னு ஆயிப் போனதுல நா பத்து வருச காலமாக மொட்டைத் தலையாவே வெளையாண்டுகிட்டு கெடந்தனா? அதுல எங்க அம்மா அப்பா வச்ச தங்கவேலுங்குற பேரு வுட்டுப்போயி ஜனம் அம்புட்டும் மொட்டன்னு வச்சப் பேருதான் நெலச்சிப் போச்சி. ஊருக்குள்ள ஆருக்கும் தங்கவேலுன்னா சுளுவா தெரியாது. மொட்டன்னா டகாருன்னு புரியும். நா நாடாவத்த வாத்தியாரு வச்சி பழக்கிட்டு நானே வாத்தியாரா வந்ததும் மொட்ட வாத்தியாருன்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க." அப்படின்னு கதைபோல சொல்லி