பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

சோலை சுந்தரபெருமாள்


மட்டும் தான் முடியும். என்னா மூக்கு அது... கத்தி மாறி அம்புட்டு கூர்மையா... அவுரு தாம்பேர மட்டும் ‘காக்கா முளி கோயிந்தசாமி’ன்னு மட்டும் வச்சுக்காமருந்துருந்தாருன்னா தமிழ்நாட்டுல அநேவம் பேரு பொண்ணு, கேட்டு போயிருப்பாங்கன்னா பாத்துக்கங்களன், என்னா கூந்தல்... என்னா பொடவக்கட்டு... அம்புட்டுலயுமுல்ல கில்லாடி. நம்ப தங்கசாமிக்கு அதப் பாத்துதான ஸ்திரீபார்ட்டா ஆக்கிட்டு பண்னும்னு ஆச வந்துச்சி. மொட்டவாத்தியாரு. கிட்ட தன் ஆசய சொன்னப்ப அவரும் ‘குஷி’பட்டுப் போயி, ‘ஒனக்கு இதெல்லாம் தூசுடா தங்கசாமி’ அப்டினுல்ல சூர் ஏத்திவுட்டு நடிக்க வச்சாரு. ரொம்ப காலத்துக்கு முந்தி நாடவத்துல பொம்பள வேசம் கட்டிக்கிறதுக்கு எந்த பொம்பள முன்னாடி வந்து நின்னா? அது என்னமோ தமிழ்நாட்டுல அத்திப்பூத்தாப்லதான் இருந்துச்சி. பொம்பள வேசத்த ஆம்பளதான் நடிச்சாவணும். அப்டி ஆளாளுக்கு நடிச்சிதான் தீத்தாங்க. ஸ்திரீபார்ட்டுன்னு மட்டுமுல்ல, டப்பாங் குத்தாருந்தாலும் சரி, டான்சாருந்தாலும் சரி எல்லாத்தையும் ஆம்பளதான் ஆக்கிட்டு பண்ணுனான். அதுக்கப்பறமாதான் நாகரீகமும், சினிமாவும் வந்த காலத்துல பொம்பளைங்களும் நடிக்க வந்தாங்க. ஒருத்திய பாத்து ஒருத்தியா வந்து ஈசப்பூத்தாப்புல பொம்பளையோளே அரிதாரம் பூசிக்க முன்னாடி வந்துட்டாங்க. அந்த காக்கா முளி கோயிந்தசாமி புள்ளயும் தான் செத்துப் போயிட்டாரே மனுசன்... காக்காமுளி செத்தப்பவும், முட்டம் பெரியசாமி செத்தப்பவும் நம்ப தங்கசாமி அன்னந்தண்ணி இல்லாம ஒருவாரம் வரைக்கும் பட்னியா கெடந்தாரு. அம்புட்டு துக்கம் அவுரு நெஞ்சுல. நாடாவத்துல நடிக்கிறதுக்கு அப்டிபட்ட மனுசங்களெல்லாம் இன்னம வருவாங்களா அப்டின்னுதான் நெனச்சுக்குவாரு தங்கசாமி.

எம்புட்டுதான் மனுச உசுர குடுத்து நடிச்சாலும் கொண்டாலும், பாட்டுதான் பாடினாலும் ரசிக்கிற மனுசனுங்களுமல்லவா கூடருந்து ரசிக்கணும். அதுதான் ஒழுங்கா நடந்துருக்கா நாட்டுல? ராசா வேசம் கட்டிக்கிட்டு நடிப்பாளி மேடையில் வந்து நின்னாக்கா பாக்குற ஜனத்துல பாதிபேரு வெளியே கௌம்பிக்கிட்டல்லவா அங்குட்டும், இங்குட்டுமா போயிருது. ஏதோ அப்பல்லாம் அந்த ராகத்தையும் நடிப்பை அனுபவிக்கிறதுக்கு வயசான கௌங்கட்டைங்கதான இருந்து தொலச்சாங்க. எளவட்டமான பசங்களோ பசங்கிகளோ நய்யாண்டி கூத்த ரசிக்கிறதுக்குத்தான நாடாவத்துக்கு வர்றதெல்லாம் நாடாவ கொட்டவையில் சீன்படுதா கட்டி லைட்டெல்லாம் போட்டுக்கிட்டு நடிக்கிற ஆளுவளும் பின்பாட்டுக்காரனும் பெட்டிக்காரனும் சுக்லாம்பர்தனம் பாடி, ‘கிர்ரத்தா கிர்ர்ரத்தா’ன்னு கொட்டுக்காரனெல்லாம் தட்டி முடிச்சப்புறம் சீன தொறந்துவுட்டா