பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

305


தஞ்சாவூரு ஜெகன்னாதனும் பலே கில்லாடியாம். கைப்பொட்டி கால் கொட்டி ரெண்டுலயும் படுசூரத்தனம் பண்ணுவாராம். பொட்டி போட்டுக்கிட்டே பாடுறதுலயும் அநேக கெட்டிக்காரரு. ராகம் புரிஞ்சி பாடுவாராம். மெல்லிய சாரீரம் தான்னாலும் மூணு சுதிக்கு பாடுவாராம். அப்றம் சிஞ்சக்கு மணப்படுவை நடேசன். சிஞ்சக்கு சிஞ்சக்குன்னு அடிச்சாருன்னா செவுளெல்லாம் பிஞ்சிப் போயிருமாம். பின்பாட்டுல பலே ஆசாமி ஆரங்குறீங்க? குருங்களூரு முருகைய்யன். சீன் படுதா டிரஸ் சமிக்ஞைகள்ல தஞ்சாவூரு சிங்காரம்பிள்ளை தட்டிக்க ஆருருக்கா? இவுரு செத்துப்போனதுக்கப்புறம் இப்பக்கி திருக்களாவூரு பூண்டி மூக்கையன் மேக்கப்புல கெட்டிக்காரராம்.

தங்கசாமி இவுங்களப்பத்தியெல்லாம் இப்ப ஓஞ்சிப்போன காலத்துல குந்தி நெனையா நெனச்சிக்கிறாரு. தங்கசாமி தன்னோட நுப்பத்தஞ்சாவது வயசுலயே நடிக்கிறத்த கொறச்சிகிட்டு ஊரு ஊரா போயி நாடாவம் பழக்கிக் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அவுரு நடிக்க வந்த பதுனஞ்சி இருவது வருச காலத்துல எத்தனை மேடை ஏறியிருந்தாலும் முட்டம் பெரியசாமி மாறியோ பிளேட்டு கதிரேசம்பிள்ள மாறியோ, காக்க முளி கோயிந்தசாமி மாறியோ பேரெடுக்க முடியலியேன்னு கவலப்பட்டு கெடக்காரு. காசுபணம் சேத்துக்கலையே அப்டிங்குற கவலையும் உண்டுதான். ஊரு ஊரா நாடாவம் பழக்கி குடுக்குற காலத்துல வந்த சம்பாத்தியத்த கெட்டிப் பத்தரம் கெவுளிப் பத்தரம்னு வச்சுக்காம போனது எம்புட்டு குத்தமா போச்சி... சதா நேரமும் பொண்டாட்டிகாரிகிட்ட வாங்கிக்கட்டிக்க வேண்டியதில்லையேன்னு நொந்து போறாரு. ஆகாத மனுச தைப்பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்னு பொண்டாட்டிக்காரிக்கு எம்புட்டுதான் சொத்து பத்து சேத்து குடுத்துருந்தாலும் பேசுற கழுதை பேசித்தான் ஆவா. ஒரு காலத்துல ஊருக்கு ஊரா நாடாவம் பழக்கி தங்கள் ஊருல தாங்களே மேடை ஏறி நடிக்கணும்னு ஆசப்பட்டவங்க தங்கசாமி மாறி ஆளுங்களப்பாத்து நாடாவம் பழக்கி குடுக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டாங்க. இதுல நாடாவ வாத்தியார்களுக்கும் கொஞ்சம் வரும்புடி சாஸ்திதான். ஒரு ஊருக்குள்ள குந்தி நாடாவம் பழக்கி குடுக்க ஆரம்பிச்சிட்டா மூணு வேள அந்த ஊருக்குள்ளயே நாளக்கி ஒருத்தரு வூடுன்னு கணக்கு பண்ணி சாப்ட்டுக்கலாம். நாடாவம் பளவுறவனுக்கு இம்புட்டுன்னு நெல்லு வசூலும் பண்ணிக்கலாம். ஆளுவால பாட்டுக்கும் கூத்துக்குமா வசப்படுத் துறகுள்ள தங்கசாமிக்கு தாவு தீந்து பேயிரும். வல்லினம்; மெல்லினம்; இடையினம் அப்படின்னெல்லாம் ஒரு எனமும் வராது பளகுறவனுவளுக்கு. ஆ...ஆ....ஆன்னு கத்துவானுவளே தவுர எளப்புள்ளி போர்ரதெல்லாமோ பம்மாத்தோ ஒன்னும் வரவே