பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

339


லேசாகப் பற்றி இருந்தது. நெருப்புச் சத்தம் மட்டுமே அங்கு நிலவியது. தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் ஓர் ஆந்தை கத்தும் சத்தம் கேட்டது.

செவந்தான் மேலே போத்திக் கிடந்த துப்பட்டியை எடுத்து தலையில் உருமா கட்டினார். நான்கு முழு வேட்டியை கோமணமாக்கிக் கட்டிக் கொண்டார். ரெங்கசாமி வைத்திருந்த சாராயப் பாட்டிலை வாங்கிக் கொஞ்சம் அன்னாத்தி கொண்டார். பொன்னு.சாமியிடம் ஒரு வாட்டி வெத்திலை எடுக்கச் சொல்லிவிட்டு - நீண்ட குச்சியை எடுத்து நீளவாக்கில் நாலு இடத்தில் துளையிட்டார். பொட்டலத்திலிருந்த சீனியை அள்ளிக் கொட்டினார். தலைமாட்டுப் பக்கம் காற்று அணைவுக்காக பாடையை இழுத்து வைத்தார். சுற்றிலும் கலகல வென எரிய ஆரம்பித்தது.

பாம்பு தவளையைப் பிடித்திருக்க வேண்டும். தவளை கத்தி அடங்கியது. பதினொன்னரை மணி கார் போகும் சத்தம் கேட்டது.

“இன்னும் கொஞ்ச நேரத்திலே தலைப்பக்கம் பத்திக்கிட்டுரும். அப்புறம் போனமுன்னா வெள்ளி முளைச்சி வரலாம்”. என்றார் செவந்தன்.

“ஓனக்கு வேலை இல்லேய்யா. வேலை மயிரத்துப் போய் மருவுடியும் வர்றியோ வந்தது வந்தாச்சி... இன்னங்கொஞ்சம் சீனி இருந்தாப் போடு- டையரு கியரு கிடந்தா எடுத்துப் போட்டு எரிச்சுப்புட்டு ஒரேயடியாய் போறதுக்கு. காலையிலே ஒருக்கா வர்றியோ.” ரெங்கசாமி சொன்னான்.

“அப்பன்னா ... ஓண்ணுசெய்... இருக்கிற தண்ணிய இவென்ங்கிட்டே குடுத்துட்டு நீ ஓடிப்போய் இன்னரெண்டு கிளாசு வாங்கியா... தண்ணி குடிச்சாத்தான் கிட்டே நின்னு வேலை செய்ய முடியும்...” செவந்தான் மடிப்பையிலிருந்து பத்து ரூபாயெக் குடுத்து ஓடச் சொன்னார்.

“வாட்டசாட்டமா உருவம்டா. சதை புடிப்பு இருக்கு. சட்டுனு எரிஞ்சிடும்.. இப்ப சாக வேண்டிய ஆளில்லைடா இவரு. வந்த மருமக படுத்துன பாடு. மனமொடைஞ்சு இப்புடிப் போயிட்டாரு. ஆனாக்காக் காசு எலக்க மாட்டாருடா.. அம்புட்டுச் சொத்தும் மாட்டுத்தரகு, ஆட்டுத்தரகு பாத்து சம்பாதிச்சது தானே.. இவுரு பையன் அப்படி கெட்டி இல்லேப்பா தண்ணி கடுமையாப் போடுறாராம்.” செவந்தாள். வைக்கோல்' பரப்பில் சாய்ந்தபடி கூறினார்.

“ஒரு நா... நானும் நம்ம மூக்கன் இல்லே அவெனும்.... சினிமாவுக்குப் போயிட்டு வந்தோம்.. ரெண்டாவது ஆட்டமுல்ல பாத்திட்டு வர்றோம். ஒட்டு வீட்டுக்கார வீட்டு பாலத்துக்கிட்டே வரயிலே யார்ராதுன்னு அதட்டுனாரு யார்டா இந்த