பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

சோலை சுந்தரபெருமாள்


ஒட்டிக் கொண்டிருந்தது. முகத்தை கையால் வழித்து விடுகையில் விரல்களுக்கிடையில் குமட்டும் மணத்துடன் பிசுபிசுத்தது இளஞ்சூடான புதிய ரத்தம். திகைப்பில் சிறைப்பட்ட நாவு அவனின் வீறிடலை. ஒரு முனகல் விளிப்பாகவே பிரசவித்தது. பதைத்து எழுந்தான். அடிவைக்கும் இடமெல்லாம் பாய்ந்து கொழகொழப்பாய் வழுக்கியது. சிரிப்பில் விரியும் கொடூர உதடுகளுக்கிடையில், தோன்றி மறையும் பல் வரிசையாய் ஒளியெறிந்த மின்னலில் வெளியெங்கும் கருஞ்சிவப்புப் படலம் கண்டு குலைபதறி அறைக்குள் விழுந்தான். திறந்த கதவுகள் வழியே இலைச் சருகுகளையும், போர்வையையும் நனைத்து உள்ளேயும் ரத்தம் நுழைந்திருந்தது. பாதி மயக்க நிலையில் அவனுக்குள்ளேயே ஒண்டிக்கொண்டு அறை மூலையில் புகைப்படமாய்ச் சமைந்தான். வெகுநேரம் அமர்ந்து வியர்த்து அந்த நிலையிலேயே உறங்கிப் போனான். உறக்கத்திற்கு முன்பாக வினாடியிலும் வெளியே சந்நதங் கொண்டல்றும் ரத்தப்பொழிவை கிரகிக்க முடிந்தது.

தன் மீது கொஞ்சம். உற்சாகத்தைப் பிழிந்து கொள்ள மேற்கொண்ட செயல்களில் தோற்று, வாடிய மனதின் மேய்ப்புத் தரையாக எதையாவது பற்றிவிட்டு இலக்கற்று அலைந்து கொண்டிருந்தான்.. வெயிலேறிய பொழுதில் அவனுக்குப் பக்கமாக வந்து நின்று மனிதர்களைக் கழித்த பஸ்ஸில் ஆலோசனையுடன் ஏறி நின்று பார்த்தான். உட்கார்வதற்கு இடமெதுவும் காலியாயில்லை. அவனது இருக்கையைக் கைப்பற்றி விரோதி யாராக இருக்குமென்று முகங்களை கூர்ந்து கவனிக்கையில் பஸ் கிளம்பியது. பஸ் புறப்பட்ட பிறகும் எங்கு செல்வதென்ற தீர்மானம் சிந்திக்காமலிருந்தது. நகரத்திற்கும் அப்பால் எந்த கிராமத்திலாவது இறங்கிக் கொள்வதென்று உத்தேசமாய்க் குறித்து வைத்தான். ஜனநெரிசல் மிகுந்த அவன் கொஞ்சம் கால் மாற்றி வைக்கவும் இடமில்லாமலிருந்தது. மனிதர்கள் எந்த சங்கோஜமுமில்லாமல் சாய்ந்தும் தள்ளிக் கொண்டும் மேல்கம்பியைப் பிடித்த கரத்தின் முட்டியால் அவன் தலையில் இடிக்கவும் செய்தனர்: அவனும் கம்பியைப் பிடித்துக் கொண்டிராவிடில் தடுமாறி, பக்கத்து இருக்கைப் பெண்ணின் மடியிலிருந்த குழந்தை மீது விழுந்திருப்பான். அந்தக் குழந்தை உறங்குவதும் கண்களைத் திறந்து பார்ப்பதுமாயிருந்தது. அவனைச் சொடுக்கி வீழ்த்தியது அதன் குறுநகை வாத்ஸல்யம் மிகுந்த இணக்கமான. பாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தாடையில் விழித்திருந்த எச்சிலில் லேசாக விஷச்செம்மையேறிக் கொண்டிருப்பதாய் ஊகித்ததும் பட்டென்று முகத்தைத் திருப்பின் கொண்டான். ஒரு ஐந்து தன் முரட்டுச் செதில்களைக் கொண்டு மண்டைக்குள்ளாக கீறி