பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சோலை சுந்தரபெருமாள்


இதற்குள்ளாக அவன் மண்டையும் கண்களும் இன்னும் அதிகம் பெருத்திருந்தன. கண்களில் காந்த ஒளி வீசிற்று. இதன் பின்னர் அவன் வாய் திறந்து பேசவில்லை. ஆயினும் அவனுடைய கட்டளைகள் என் மூளையில் சற்று நன்றாகப் பதிந்தன.

“உன் குல்லாவை எடுத்து என்னிடம் கொடு” என்று மானஸ்ரூபக் கட்டளை பிறந்தது.

‘முடியாது’ என்று நான் வாயால் சொன்னேன். ஆனால், கையினால் குல்லாவை எடுத்துக் கொடுத்தேன். மெளன மனிதன் அக்குல்லாவை மண்டபம் போலிருந்த தன் தலையின் உச்சியில் வைத்துக் கொண்டான். பின்னர் குரங்கு குல்லாவை என்னிடம் கொடுத்தான்.

“இதை உன் தலையில் வைத்துக்கொள்” என்ற இன்னொரு கட்டளை பிறந்தது.

“மாட்டேன்” சொல்லிக்கெண்டே அதை வாங்கி என்னுடையத் தலையில் வைத்துக் கொண்டேன்.

“இடது கையில் குல்லாவைத் தூக்கி வலது கையினால் சலாம் போடு!” என்று அடுத்த உத்தரவு வந்தது.

ஐயையோ! இதென்ன அநியாயம் ? மனிதர்கள் குரங்குகளையும், நாய்களையும் பழக்குவது போல் அல்லவா அவன் நம்மைப் பழக்குகிறான்?

“முடியாது” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னேன். ஆயினும் என் இடதுகை குல்லாவைத் தூக்கிற்று. வலது கை ஸ்லாம் போட்டது.

“மீண்டும் சலாம் போடு!”

எனக்கு கண்ணில் நீர் ததும்பிற்று. ஆயினும் ஸலாம் போட்டேன்.

“எழுந்து நின்று கூத்தாடு”

அவமானம்! அவமானம்! ஆனாலும் எழுந்து நின்று கூத்தாடினேன்.

“போதும் உட்கார்” உட்கார்ந்தேன். அடுத்தார்போல் “செத்துப்போ” என்ற கட்டளை பிறக்கக்கூடாதா என்று நினைத்தேன். என்ன அதிசயம் அடுத்த கணத்தில் “செத்துப்போ” என்று பயங்கரமான கட்டளை வந்தது.

“மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே மல்லாந்து விழுந்தேன் வருங்கால மனிதனுடைய பயங்கரமான பெரிய மண்டை என் முகத்தினருகே வந்தது. அவனுடைய மெலிந்த நீண்ட விரல்கள் என் முகத்தைத் திண்டின. அளவில்லாத பீதி கொண்டவனாகக் கண்களை மூடிக் கொண்டேன்.

ஒரு பெரிய பிரயத்தனம் செய்து கண்களைத் திறந்தேன். என் மார்பின் மீது குரங்கு உட்கார்ந்து பல்லை இளித்துக்