பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்களுள் ஒன்று, பல தலைமுறை எழுத்தாளர்களையும் நேர்த்தியாக நிரல் படுத்தியதுதான். அதோடு பல குணம் சார்ந்த எழுத்தாளர்களை உள்ளடக்கியதும். எழுத்து வியாபாரிகளை கவனமாக விலக்கியிருக்கிறார். மெளனி, கலைஞர், தி.ஜா, க.நா.சு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம் . மொத்தத்தில் எல்லாவற்றிலும் காவிரியின் ஈரம், வண்டலின் வாசம். தஞ்சைக்கே உரிய கோவிலும், கோவில் சார்ந்த குளங்களும் எல்லாக்கதைகளிலும் பரவி பரிணமித்துள்ளன.

காவிரி கர்நாடகத்தில் இருந்துதான் தஞ்சைக்குப் பாய்ந்து கொண்டிருக்கிறது. காவ்யாவோ தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பாய்கிறது. காவிரிக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. காவ்யாவிற்கோ தடைகள் இல்லை. தமிழும், தமிழ் சார்ந்த வாழ்க்கையும்தான் இதன் இலட்சியம். இத்தொகுப்பிற்கு இசைவு தந்த எழுத்தாளர்களுக்கும், அணிந்துரை அளித்த திரு.வல்லிக்கண்ணன் அவர்களுக்கும், அச்சிட்டுதவிய ‘மா’ அச்சகத்தாருக்கும் காவ்யாவின் நன்றிகள்.

அன்புடன்
காவ்யா சண்முகசுந்தரம்.