பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கி. பி. 1777க்குரிய ஓராவணக் குறிப்பு." "அதிராம்பட்டினம் வியாபாரி கப்பலில் அரிசியை ஏற்றிக் கொழும்புக்குச் சென்று திரும்புங்கால் கொட்டைப்பாக்கு ஏற்றிவந்தான். காற்றினால் கப்பல் தத்தளித்தது. இராமநாதபுரம் தாலுகாவின் மணியகாரன் நான்கு துப்பாக்கிக் காவல்காரர்களை அனுப்பிப் படகோட்டியை அடித்துப் பொருள்களை எடுத்துச் செல்ல முயன்றான். நாம் அப்பொருள்களை விட்டு விடாமல் சம்பு மகாதேவி பட்டணத்தில் வைத்திருக்கிறோம்; இராமநாதபுரம் கோட்டைத் துப்பாக்கிக்காரர்களும் இருக்கின்றனர்; மாலுமியைப் பிடித்துக் காவலில் வைத்திருக்கிறார்கள். கும்பினி துப்பாக்கிக்காரர்களும் மருந்து குண்டுகளைக் கொண்டு பண்ணையைப் பலவந்தமாகப் பிடிக்க இராமநாதபுரத்துக்கு எழுதியுள்ளார்கள்" -- = என்பதாகும்.இதனால் இராமநாதபுரத்துக்கும் தஞ்சைக்கும் பகைமையிருந்தது என்றும், தஞ்சை அரசர் வலிமையிழந்து இருந்தார் என்றும், இக்காலத்துக்கு அண்மையில்தான் லார்ட் பிகட் அவர்களால் துளஜா இரண்டாவது தடவை அரசு கட்டில் எய்தினார் ஆதலின் கும்பினியின் தயவை நாடியவராகவே இருந்தார் என்றும் தெரிகிறது. நவாபு நவாபு முகம்மதுஅலிகான் எப்படியாவது தஞ்சையைக் கைக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளிலியே இருந்தார் என்றும், ஏதாவது காரணம் கூறித்தஞ்சையைத் தாக்குவதே நவாபின் எண்ணம் என்றும், துளஜா கப்பம் செலுத்தி வந்தார் என்றும், 1773இல் நவாபு வெற்றி எய்தி 17-9-1773 முதல் மூன்றாண்டுகள் தஞ்சையைத் தன்கீழ்க் கொண்டிருந்தார் என்றும், நவாபின் மூத்தமகன் உமதத் உல் உமராவுக்கு இதில் பெரும் பங்கு இருந்தது என்றும், "கும்பினியுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில்(6) விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தஞ்சையைக் கைப்பற்றியது உமதத் உல் உமாராக என்று வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளபோதிலும் மோடி ஆவணத் தமிழாக்கக் குறிப்பு 'மதாரமல்க' என்று வேறொரு பெயரைக் குறிப்பிடுகிறது. 'மதாரமல்க வந்து கோட்டையைப் பிடித்தான்" என்பதில், மதாரமல்க என்ற பெயர் வந்துள்ளது. இப்பெயர் போன்ஸ்லே வம்ச சரித்திரத்தில்" 6. 1-147 முதல் 149முடிய 7. 1–168; 1–164; 8–142; 8–177 - 7.அ. நவாப்பின் முத்த குமாரர் உமதடில் உமாரானுக்குக் கொடுத்தது 6714 சக் 8-177 8. P. 299, Maratha Rule in the Carnatic-Srinivasan, C. K. P, 62-69, A History of British Diplomacy. in Tanjore - K. Rajayyan 9. 6-279 10. பக்கம் 120