பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 " தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆக்ரமித்துக் கொள்வதற்காகத் தன் இரண்டாவது பிள்ளையான மதார் முலுக் என்பவருக்கு அதிகாரம் கொடுத்து யாதொரு காரணமுமின்றிப் படைகளை அனுப்பினார் " என்று காணப்படுவதினின்று இப்போரில் பெரும்பங்கு கொண்டவர் மதார் முலுக் என்பவர் ஆவர் என்பதும், அவர் முகம்மது அலியின் இரண்ட்ாவது மகன் என்பதும் போதரும். தஞ்சை ஆட்சி முகம்மது அலியிடம் மூண்றாண்டுகள் இருந்தன என்று வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கப் போன்ஸ்லே வமிச சரித்திரம், 'தஞ்சாவூர் ராஜ்யம் இரண்டு வருஷ காலம் நவாபின் ஆட்சியின் கீழிருந்தது' என்று கூறுகிறது." . ஹைதர் கலாபு (மேலே கூறிய சாமிசிராங்கு மகன் ராமசாமி சாமி நாயக்கன் கடிதத்தில்) அடுத்துக்கூறியுள்ள வரலாற்றுச் செய்திகள் கவனிக்கத்தக்கனவாம்: பிக்கட்டு துரை வந்து ரீமகாராஜா சாயேபு அவர்களுக்குப் பட்டம் கட்டி வைத்தார். மகாராஜாவே கோட்டை அலங்கிருதமில்லை ; மாட்டியன் துரை சென்னைப்பட்டணம் போய் வந்தார். அவர் பாரிசம் எங்கள் தகப்பனார் சாமி சிறாங்கையும் 33 சனத்தையும் மாட்டியன் துரைவசமாக ஒப்பித்தார். கோட்டையும் கட்டி முடிந்தது. அயிதர் வந்தவன் பெரிய அணைக்கரையை வெட்டிக்கவிழ்த்தான் : அரசர் அணைக்கரையை அடைத்துப் போட்டு வரவேண்டும் என்று உத்தரவு பண்ணினார் ............ அக்கரையில் மண்ணை எடுக்கப்போனதற்குக் கிராமத்தாள் தகராறு பண்ணினான். சாயபு டிப்பு சாயபு அவர்களிடத்திற்போய் ............ வாங்கிக்கொண்டு வந்து கிராமத்தாருக்குக் கொடுத்து அடைத்துப்போட்டுத் தஞ்சை நகரம் வந்து சேர்ந்தோம். H11. இதிலிருந்து ராமநாதபுர விவகாரத்துக்குப் பிறகு முகம்மது அலி படை யெடுப்பு, துளஜா தோற்று அரசிழந்தமை, லார்டு பிகட் வந்து பட்டம் கட்டியமை அரண்மனையைப் பழுதுபார்த்தமை, ஹைதர் படையெடுப்பு, அணைக்கரையை வெட்டி விடுதல், பழுதுபார்த்தற்குத் தடை செய்தமை, பின்னர் அனுமதி பெற்று அணைக்கரையைச் செப்பனிட்டமை ஆகிய செய்திகள் நிரலே கூறப்பெற் றுள்ளன. - ஹைதரின் படை அணைகள் முதலியவற்றை அழித்தமையோடு" நாட்டையும் கொள்ளையடித்தது. அந்தக் கொள்ளையருடன் இந்த நாட்டி லுள்ளவர்களும் சேர்ந்துகொண்டு கொள்ளையடித்தனர் என்றும் தெரிகிறது. - 11. பக்கம், 121 12, 6-279, 280, 281 13. “A most luxuriant crop with which the ground was at that time covered was instantly swept off and every water dyke and embankment totally destroyed” - F.N.P. 310, Maratha Rule in the Carnatic-Srinivasan, C. K.