பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 தஞ்சை சரஸ்வதி மகாலில் பல ஏடுகள் உள்ளன: அவ் எழுத்துச் சான்று களில் 10ஆவது தொகுதியில் சரபோஜி மன்னரின் காசி யாத்திசை பற்றிய பல செய்திகள் உள்ளன. அவற்றுள் எல்லா விவரங்களும் காணப்பெறவில்லை. மோடி எழுத்துச் சான்றுகள் முழுமையும் தமிழாக்கம் செய்யப்பெறின் மேலும் பல செய்திகள் கிடைக்கப்பெறும் என்பது உறுதி. சென்னை ஆவணக்காப்பகத்தில் மோடி ஆவணங்களில் பாதுகாத்து வைக்கப்பெறவேண்டியவை என்று கருதப்பெற்ற பல ஆவணங்கள் உள்ளன. அவற்றுள் 1281...... எண் கொண்ட ஆவணம் கட்டடம் (Bound) செய்யப் பெற்றதாக உள்ளது. அது மோடியெழுத்தில் எழுதப்பெற்றுள்ளது. அட்டை யின் மேல்மட்டும் சரபோஜி காசியாத்திரை " என்று தமிழில் எழுதப் பெற்றுள்ளது. சரபோஜி மன்னர் காசிக்குச் செல்லத் திட்டமிட்டார்; அந்நாளைய ஆங்கில அரசாங்கக் கவர்னர் அவர்களின் ஆணைப்படி இம்மன்னருக்கு ஆங்காங்கு உரிய மரியாதைகள் வழங்கப்பெற்றன. இம்மன்னர் தங்கும் இடங்களில் பற்றுச் சீட்டுப் பெற்று இவர் கேட்ட தொகைகளை அவ்வக் கோட்ட அலுவலர்கள் அளித்தனர். எனவே 'அறந்தலைத் தந்த அரும் பொருள் தாங்கிச் சேறல்', சரபோஜி மன்னர்க்குச் சாலவும் எளிதாயிற்று. பயணத்திட்டம் காசிக்குச் சென்று வருவதற்குப் பெரிய அளவில் சரபோஜி மன்னர் திட்டம் தீட்டியிருந்தமைக்கு மோடி எழுத்துச் சான்றுகள் உள்ளன. செல்லும் பொழுது ஒரு திட்டம் தீட்டியிருக்கக்கூடும். அத்திட்டம் கொண்ட ஏடு கிடைக்கவில்லை. எல்லா மூட்டைகளையும் ஆய்ந்தால் கிடைக்கக்கூடும். 1820 முகாம் - கைர்ஹட் 1820 முகாம் - செர்கி குவியாப் பாடா எலர்காடி மேதினியூர் மதனபூர் ஸ்ல்கியாகாட் சிரிஸ் பூரீகயாஜி என்றும்" ஸஹஸ்ரா துர்மாபாத் டுஹரி மொஹல்ஸ் ராஜி என்றும் காணப்படுதலால் வடநாட்டு யாத்திரைக்குத் திட்டம் தீட்டியே புறப்பட்டார் என்று அறியலாம். 3, 8.66 முதல் 88 வரை ; 4-186 முதல் 197 வரை; 5.12 முதல் 207 வரை; 7.642 முதல் 557 வரை, 4. Table of contents of the catalogue indicating the nature of the contents of the Raj Records, Tanjore : Page 528; Bundle 1281; Serial No. of item 81, 4-186-187 6, 4-188 5