பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 10 19. நம்முடைய குழந்தையைக் காப்பாற்றுகிற விஷயத்திலும் அவர் வித்யாவான் ஆகவேண்டிய விஷயத்திலும் நம்முடைய தர்பாருடைய வேஷத் தைப் போட்டுக் கொள்வதற்கு ரெஸிடெண்டு தயையுள்ளவராக இருக்க வேண்டும். 20. நம்முடைய பிறந்தநாளன்று பெரிய கோட்டையின் பேரில் நம்முடைய வயதின் கணக்குப்படி குண்டுபோடவேண்டியது. அதற்காக அதே தினத்தில் சிவகங்கைக் கோட்டையின்மேல் 21 (இருபத்தொரு) குண்டுகளைப் போடவேண்டும். 21. வசந்த பீஞ்சமி தினம் நடக்கும் (ஸ்தர்) தர்பார் வழக்கப்படி நடத்தவேண்டும். - 22. ரா. பூரீ. சுவாமிகளுக்கு பூரீ ராமநவமி புண்ணியதிதி பண்டிகை வகையறாக்களுக்கு மொயினும் மரியாதையும் நடக்கவேண்டியது. 23. இங்கிருக்கும் சிப்பந்திகளில் ளர்க்கேல், பங்க் நாயிக், கில்லேதார், சேனாபதி, எலர்க்காருடைய உறவினர்கள் இவர்களுடைய வீட்டில் சுபா சுபங்களானால் இனாமும் வஸ்திரமும் வழக்கப்படி நடக்கவேண்டும். 24. எல்லா தேவஸ்தானங்களுக்கும் இரத உற்சவத்திற்காகப் பூஜையும் தகூடிணையும் வஸ்திரங்களும் பானக பூஜையும் கொள் கஞ்சி வகையறாவும் வழக்கப்படி நடக்கவேண்டும். *. ྋའོ།། །། 25. துக்கோஜி பாலிய வயது குழந்தையானதால் அவர் வெளியே போவது வருவது சுகம் சந்தோஷத்திற்கும் பாத்திரராக இருக்க வேண்டு மென்பது என்னுடைய முக்கியமான எண்ணம். ஆதலால் அதற்காக அவர்க ளிடமுள்ள சில் ஜனங்கள் கெடுக்க எண்ணங்கொண்டு அந்தக் குழந்தை யைக் கைதியைப் போல் செய்ய முயற்சிக்கிறார்கள். இப்படியிருந்தாலும் அந்தக் குழந்தை வெளியே உலாவப் போய் வருமாகில் அவருக்குப் பதக்கமும் கைக்கு ஏதாவது ஆபரணங்களையும் கொடுத்து அவருட்ன் கூட்டப் போகிற வர்களுக்கு 2, 4. காரியத்திற்குப் போதுமானதைக் கொடுத்து உத்தரவிடலாம். 26. செள. ராஜம்பாவும், உபலம்பாவும் சுபான்ஜி போஸ்லேயின் சம்சாரம் நானம்மா இவர்களிடம் தான தர்மத்திற்காகக் கொடுத்து வர வேண்டும். - -- - , o, ... -- .. 27. வியாச பூசை பதிலாக அந்தந்த மடங்களுக்குத் தானம் தர்மத் திற்குக் கொடுக்கிற வழக்கப்படி கொடுத்து வரவேணும். o 28. நம்முடைய பாயிமார்களுக்குத் தானம் தர்மத்திற்குக் கொடுக்கிற் படி வழக்கப்படி கொடுத்து வரவேண்டும். --