பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 --29. மஹாலோ மஹால்களில் நடக்கவேண்டிய அவசியமான செலவு கள் அதிகமாக இருப்பதாலும் சைனியத்திலுள்ள சிப்பந்திகளுக்கு மாதச் சம்பளம் அதிகமாக இருப்பதாலும் மஹாலோ மஹால் அவசியமான செலவுக்கு இடைஞ்சலாவதின்ால் சம்பளக்காரர்களின் தொகையில் மாதத்திற்கு ஐயாயிரம் அல்லது ஏழாயிர சக்கரம் கம்மி செய்து கொண்டு அந்தத் தொகையை மாதத்திற்குக் கும்பினியிலிருந்து வருகிற கிஸ்தியின் தொகைக்கு அதிகம் ஆகாமல் சம்பளக்காரர்கள் வகையறாவும் மஹாலில் நடக்கிற யுக்தமான செலவுகளைச் செய்யவேண்டியது. டிெ செலவுக்கு டிை தொகை போதாமல் இடைஞ்சலானால் கும்பினியிலிருந்து வருஷக் கடைசியில் இதரத் தொகைகள் வகுகிறதில் நடக்கிறது. பாக்கி மீதியாகிற தொகையைச் சம்பளக் காரர்களுக்குப் பாக்கிக்குக் கொடுக்கலாம். 30. சம்பளக்காரர்களுடைய மாதச் சம்பளத்தொகையில் ஐயாயிரம் அல்லது ஏழாயிரம் சக்கரம் குறைப்பதற்குத் தங்கள் இஷ்டப்படி சம்பளம் குறைக்கலாம். வேலை விட்டுப்போகிற சிப்பந்திகளுக்கு வேறு ஏதாவது வேலை கொடுக்கிற விஷயத்தில் ரெஸிடெண்டு சாகேப், தயவுசெய்து நமக்குநம்முடைய சமஸ்தானத்திலிருந்து கொடுக்கிறதொகையில் முந்தியே வாங்கிக் கொடுத்துச்-சகாயம் செய்ய வேண்டும். 31. பெளர்ணமிக்கு இரவில் போடவேண்டிய குண்டுகளை வழக்கப் படி போடவேண்டும். 32. சமஸ்தானத்திற்காகப் பானகபூஜை மாமுல்படி - நடக்கவேண்டும். மேலெழுதிய விவரப்படி நடக்கிறது. ஸ்ர்க்கேல் ராஜேபூரீ ராமோஜி ஸர்ஜே ராவ் காட்கே மருத்துவ வசதிகள் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் 818எண் கொண்ட ஒரு கையெழுத் துச் சுவடியிருக்கிறது. அதில் மன்னர் காசியாத்திரை சென்ற பொழுது எடுத்துச் சென்ற மருந்துகளின் பெயர்கள், அளவு, எடுத்துச் சென்ற பெட்டி களின் எண் ஆகியவை குறிக்கப் பெற்றுள்ளன. அம்மருந்துகள் அடங்கிய பெட்டிகள் எட்டாகும்; எண் 37 முதல் 44 முடிய. -- மன்னருடன் ஒரு ஆங்கிலேய மருத்துவர் சென்றதாக அறியவருகிறது. அவர் பெயர் டாக்டர் ஸ்ட்டன்’ என்பதாகும். அவர் காசியில் இறந்து விட்டார். வங்காளத்தில் உள்ள கவர்னர் ஜெனரலுக்குத் தெரிவிக்கப்பெற்றது.

  • Mr. Surgeon Sutton-Selections from the Asiatic Journal, Vol. XII, July

to Dec. 1821, P. 419: Rajah of Tanjore's visit to Benares