பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ஸல்காகாட்டிலிருந்து "அ பாகல்புரம் வரையிலும் கங்கைக்கரையிலேயே செல்ல வேண்டும். பாகல்புரத்துக்குத் தெற்கே " ஜாடகண்ட வைத்தியநாத " என்ற பெயருடைய தலமிருக்கிறது. இதற்கு மறு பெயர் ' தேவகர் " என்பது. இராவணன் திருக்கயிலையினின்று புறப்படுகிறான் ; சிவபெருமா னுடைய திருவருளால் நினைத்ததை அருள வல்லதும் சுயம்புவும் ஆகிய சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கைக்குச் செல்கிறான். வழியில் அச்சிவலிங்கத்தைக் கீழே வைக்கவேண்டிய வற்புறுத்தல் ஏற்பட்டது. அப்பொழுது அந்தண வடிவத்தில் திருமால் தோன்றினார். அவரிட்த்தில் இராவணன் சிவலிங்கத்தைக் கொடுத்தான். திருமால் அதனைக் கீழே வைத்தார்; வைத்தவுடன் அச்சிவலிங்கம் அவ்விடத்திலேயே நிலைத்து விட்டது. இராவணன் அச்சிவலிங்கத்தைப் பூசனை புரிந்தான். "வைத்யன்' என்னும் வேடன் ஒருவனும் பூசித்தமையின் அச்சிவலிங்கப் பெருமானுக்கு "வைத்யநாத' என்ற பெயர் வரலாயிற்று. அப்பெருமானுக்குக் கங்கா அபிஷேகம் மிக விருப்பம் ஆகையால் கங்கோத்திரி, ஹரத்வார், பிரயாகை, கல்யாண்பூர், கங்காசாகர் என்ற இவ்வைந்து இடங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் பலநூறு காவடிகள் வருகின்றன. மகா சிவராத்திரி நாளில் மட்டும் 1 லக்ஷம் காவடிகள் வருகின்றன. யாத்திரைக்கு வருபவர்கள், சுவாமி அம்மன் கருவறைகளுக்குரிய விமானங்களில் கொடிகளைக் கட்டுவர். அதற்குக் கோடி என்று பெயர். அவ்விரண்டு விமானங்களின் சிகரங்களுக்கும் சேர்ந்தாற்போலத் தலைப்பாகை யைக் கட்டுவதும் உண்டு. இதன் நீளம் சுமார் 105 முழம். யாத்திரை செய் பவர்கள் காலை 2 நாழிகை முதல் 12 மணி வரையிலும் தம் கையாலேயே பூசை செய்வார்கள். வருகிற பெருமை பொருந்திய பக்தர்களுக்குச் சன்னிதியில் பிரசாதம் கொடுக்குங்கால் சிகரத்துக்குக் கட்டிய கொடியிலிருந்து ஒன்றைத் தலைக்குக் கட்டுவது வழக்கம். கெளரி, பார்வதி என்று இரண்டு அம்மன்கள். சிவலிங்கம் மிகச் சிறியது; தலையிற் கொஞ்சம் அமுங்கினாற்போல் இருக்கும்; பிராகாரத்தில் துர்க்கை முதலிய பரிவார தேவதைகள் உண்டு. கோவில் பெரிய பிராகாரத்தில் மூன்று வாயில்கள் உண்டு. தெற்குப்புறம் வாயில் இல்லை. கோவிலின் தென் கிழக்கில் " சந்திரகூபம்' என்று ஒரு தீர்த்தம். அதில் பஞ்ச கங்கை வசிப்பதாக ஐதீகம். மன்னர் சந்திரகூபத்தில் நீராடினார் ; கோதானம் செய்தார் : விபூதி உருத்திராக்கங்களைச் சூடிக்கொண்டு சுவாமிக்குப் பஞ்ச கங்கையின் தீர்த்தத் தால் அபிஷேகம் செய்தார்: பூசை செய்தார்; பின்னர்த் தம்முடன் வந்தவர்கள் எல்லோருக்கும் கங்கா திர்த்தத்தை வாங்கிக்கொடுத்து அபிஷேகம் செய்வித் தார்; பின்னர், சுவாமி அம்மன் விமான சிகரங்களுக்கு ஐரிகைக் கொடியைக் 39.அ. 5.189 (கல்கத்தாவினுள்ள ஒரு பகுதி)