பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இச்செய்திகளையெல்லாம் ரகுநாத் சிவாஜிக்கு எழுதினார். சிவாஜி ஒரு நீண்ட மடலை எகோஜிக்கு எழுதினார். அதில் ரகுநாதரொடு கலந்து உடன்படிக்கை செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறினார். எகோஜி தன் மனைவி திபாபாயின் உதவியால் ரகுநாதரை வரச்செய்தார். ஒருடன்படிக்கை ஏற்பாடாயிற்று. அதன்படிக்குத் தஞ்சைப்பகுதி மட்டும் ஏகோஜிக்கு உரியது என்றும், அதற்காக 3 லக்ஷம் " பர்தோக்கள்" சிவாஜிக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சிவாஜி பிஜபூர் சுல்தானிடம் தஞ்சை உட்படத் தான் வென்ற பகுதிகளுக்குரிய ஆட்சியுரிமை யைப் பெற்றார், இது ஏகோஜிக்கு மனவருத்தம் அளித்தது. ஆகவே ஏகோஜி அரசாட் சியில் வெறுப்புற்றார் ; பைராகி போல ஆனார். இவ்வணம் வெறுப்புற்று இருப்ப்து கூடாது என்று சிவாஜி மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். பின்னர், கி. பி. 1680இல் சிவாஜியும் இறந்தார். ஏகோஜி சுயேச்சையாகச் செயல்படும் நிலையில் கி. பி. 1883 வரை ஆட்சி செய்தார். பெருவீரனாகத் திகழ்ந்திருந்தபோதிலும் தன் தமையனாரின் தொல்லைக்கு உட்படவேண்டியவராக ஏகோஜி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகோஜிக்குப் பின் இவரது முதல் மகன் சாஹஜி அரசு கட்டில் ஏறினார். இவர் 1684 முதல் 1712 வரை ஆட்சி செய்தார். இவர் மிகச் சிறந்த அரசர். இவர் காலத்தில் பல மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. இவரும் பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்; பல மொழிகளிலும் பல நாடகங்களை இயற்றினார். இவர் காலத்தில் பல சிறந்த புலவர்களும் திகழ்ந்தனர். (இசை நாடகம் நாட்டியம் என்ற 16ஆம் தலைப்பில் காண்க). இவர்காலத்தில் சில போர்களும் நிகழ்ந்தன. ஒரு போரில் சேதுபதி தஞ்சைக்குரிய அறந்தாங்கிக் கோட்டையைப் பிடித்துக் கொண்டார். . இவருக்குக் குழந்தைகள் இன்மையால் இவரது தம்பி முதலாம் சரபோஜியும் அவருக்குப்பின் அவர் தம்பி துக்கோஜியும் அரசர் ஆனார்கள், துக்கோஜி காலம் முதற்கொண்டு அண்டைநாடுகளோடு ஏதாவது ஒரு முறையில் போரிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ராமநாதபுரம், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் அரசாட்சி செய்தவர்களுடன் சிறு போர்கள் நடந்தன. முதலாம் துளஜா (துக்கோஜி) ராமநாதபுரத்தின்மேல் சண்டைக்குச் சென்று வென்ற செய்தியை (செவி வழிச் செய்தியாக அறிந்ததை) ஒரு ஆவணம் குறிப்பிடுகிறது. * 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்க்காட்டு நவாபுக்கு அடங்கி யிருக்க வேண்டிய நிலை தஞ்சை மராட்டியருக்கு ஏற்பட்டது. தஞ்சை மன்னர்கள் நவாபுக்குக் கப்பம் செலுத்த வேண்டியவர் ஆயினர். 1732இல் சந்தா சாயேபு ஒரு தடவை தஞ்சையின் மேல் படையெடுத்தார். துக்கோஜி பெரும் பொருள் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டார்.

  • 6 - 278, 279.