பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கட்டுவித்தார்; பட்டுத் துணியினால் இரண்டு விமான சிகரங்களும் ஒன்று சேரும்படி சுற்றினார். யாவரும் மகிழ்ச்சி எய்தினர். காசியில் தங்கியமை மன்னர் 10-7-1821இல் காலை 8 மணிக்குக் காசியை அடைந்தார். 12-7-1821இல் எழுதிய மடலினின்று" ஆஷாடசுத்ததசமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 10ஆம் நாள்) காசியை அடைந்ததாகவும், காசியில் காசித் தம்பிரா னுடைய மடத்தில் இறங்கியதாகவும், வந்தநாள் கூேடித்திர உபவாசமும் தீர்த்த விதியும் செய்ததாகவும், மறுநாள் மணிகர்ணிகா ஸ்நானமும தீர்த்த சிரார்த்தமும் செய்ததாகவும், மழைக்காலமாக இருந்ததால் அத்தலத்தில் சிலகாலம் தங்குவ தாக நிச்சயித்திருந்ததாகவும், விஜயதசமிவரையில் தங்கியிருக்கத் தீர்மானித் திருந்ததாகவும் அறியவருகின்றன. காசியினின்று 11-9-1821இல் எழுதிய குறிப்பொன்றில்," "நம்முடையவும் நம்முடன் கூட இருப்பவர்களுடைய சந்தோஷத்திற் காகவும் பாத்ரபத பஹ-ளை திவிதியை வியாழன்-செப்டம்பர் 18வ வரையில் இங்குத் தங்கி 14வ பிரயாகைக்குப் போய் அந்த யாத்திரையை முடித்துக் கொண்டு ' என்றிருப்பதால் 13-9-1821 முடியக் காசியில் மன்னர் தங்கியிருந்தார் என்பது பெறப்படும். ஆனால் அதற்கு அப்பாலும் மன்னர் காசியில் தங்கியிருந்தார் என்பதும், அதற்குரிய காரணமும், 4-10-1821இல் காசியி லிருந்து எழுதிய கடிதச் சான்றினால்" தெரியவரும். - ' செப்டம்பர் 13ஆம் தேதிக்குப்பிரயாகை யாத்திரை புறப்படுகிறோம் என்று எழுதியிருந்தோம். அதன்படியே ஸவாரியும் தயாாரயிற்று. ஆனால் அதற்கு முன் நன்றாக நின்றிருந்த மழை, கிழக்குத் திசையிலிருந்து அடிக்கும் கெட்ட காற்றுடன் ( மழை ) பெய்வதால் பாத்ரபத பஹாள அமாவாசைக்குப் பிறகு, ஆஸ்விஜ சுக்ல பாட்டிமை முதல் எப்பொழுதாவது வெய்யில் எப்பொழு தாவது மப்பு இமமாதிரி இருக்கிறது. இதனால் மேற்படி (அக்டோபர்) மாதம் 26வ புறப்படுவதாக இருந்தோம்" என்பதனால் 26-10-1821இல் காசியிலிருந்து புறப்பட நினைத்தார் என்பது பெறப்படும். == 19-10-1821வ கடிதம்' " ஆஸ்விஜ கிருஷ்ணபசஷ பஞ்சமி திங்கட்கிழமை காலை 4 மணிக்குப் புறப்பட்டுப் பிரயாகைக்குப் போகிறோம்; அங்கிருந்து புறப்பட்டு நாகபூர், ஹைதராபாத், கர்நூல், கடப்பை, திருப்பதி, பூரீகாளஹஸ்தி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், மாயவரம் வழியாகத் தஞ்சை வர நிச்சயித்திருக்கிறது' என்றும், 40. 5–125, 126 41, 5-72, 78 42, 5-117 43, 5-180