பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 "31-10-1821 கடிதம்' 28வி க்குப் பிரயாகைக்கு வந்து அங்குள்ள தீர்த்த விதிகளை ஒழுங்காகச் செய்தாயிற்று ' - என்றும் எழுதியுள்ள பகுதிகளால் 23-10-1821வ காசியைவிட்டுப் பிரயாகைக் குப் புறப்பட்டார் என்பது தெளிவு. சிதம்பரத்தில் இளவரசர் வரவேற்றது 7-4-1822ஆம் தேதியிட்டதும் ரடனே என்ற முகாமிலிருந்து எழுதப் பெற்றதுமான கடிதத்தில்' சரபோஜி மன்னர் சிதம்பரத்தையடையும்பொழுது செய்ய வேண்டிய வரவேற்பு முறைகள் விவரமாக எழுதப்பெற்றுள்ளன. 14-4-1822ஆம் தேதி காலையில், சி. சின்னதிவான் சாயேப் (இளவரசர்) மகாராஜாவைப் பார்க்கச் சிதம்பரத்திலிருந்து முன்னால் வருவார். மன்னரின் சவாரிக்குரியவர்கள் ஒரு பக்கமும் சேனைகள் ஒருபக்கமும் ஆக இரண்டு பக்கங் களிலும் கோவையாக நிற்றல் வேண்டும். நடுவிலுள்ள இடத்தில் சின்ன திவானின் சைன்யங்கள், முன்னால் கொடியுடைய யானை, ஹாஜாசரின் யானை வரைக்கும் நிற்றல் வேண்டும். சின்ன திவான் சாயேப் உள்ளே புகும்பொழுது சிப்பாய்கள், " ஜோஹர் பரங்க ஜோஹர் யந்த்ர ' என்று சொல்வர். அம் மரியாதையைச் சின்ன திவான் ஏற்க வேண்டும். _ பின்னர் லெப்டினண்ட் கர்னல் வில்லியம் பிளாக்பர்ன், ரெஸிடெண்டு சாயேப், சின்ன திவான் சாயேபைச் சர்க்காரின் கார்பாரியோடு அழைத்துக் கொண்டு, ஹாஜாரிடம் (மன்னரிடம்) வருவர். அப்பொழுது பீரங்கிகள் முழங்கும். சி. ரா. இளைய திவானுடைய கையை ரெஸிடெண்டு பிடித்து ஹ ஜாருடைய கையில் ஒப்பிப்பார். எட்டுக்குண்டுகள் முழங்கும். ஒவ்வொரு பக்கத்தில் மூன்று சலாம்கள் வீதம் இரண்டு பக்கம் ஆறு சலாம்களை ஏற்க வேண்டும். ரெஸிடெண்டு சாஹேப் இளைய திவான் சாஹேபை ஹன்ஜாரிடம் ஒப்பித்த உடன் ஹாஜுரானவர் ரெஸிடெண்டுக்குக் கல் அழுத்திய நகையைக் கொடுப்பார். - -- ------- == பின் சி. ரா. இளையதிவான் சாயேப் ரெஸிடெண்டு சாயேப் இருவரை யும் டாக்டர் பி. மக்லோட் சாஹேப் வந்து காண்பார். பின் இளைய திவானை அழைத்துக்கொண்டு, மன்னர் செள. மா. பாயி சாஹேபிடம் செல்வர். செள பாயி சாஹேப் இளவரசருக்கு முத்துமாலை யொன்றை ஆசி கூறித்தருவர். பிறகு இளவரசர் ரெஸிடெண்டு சாஹேப் நின்று கொண்டிருக்கும் இடத்துக்குச் செல்வர். கவர்னர் ஜெனரல் மன்னருக்கு அளித்ததும், "கங்கா ஜமுனி" என்று பெயர் உள்ளதுமான யானையை ஹெளதாவுடன் சி. ரா. 44, 5-121 45. 5-28 முதல் 97 வரை 1