பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 127 -செல்லும் வழியில் சத்திரம் பார்த்து முகாமைத் தீர்மானித்துச் சத்திரத்தின் பெயரையும் அதன் விஸ்தீரணமும், அந்தச் சத்திரத்தில் ஹ-ஜாரின் சவாரிக்கும். மா. செள. பாயி சாயேபுகளுடைய சவாரிக்கும் இறங்கத் தகுதி யுள்ளது. அல்லது தகுதியில்லாதது, ஒரு சவாரி மட்டும் இறங்கப்போதும் போதாது, தண்ணிர் வசதி ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு, சாமான்கள் வைக்கோல் தீனி வகையறா கிடைக்கும்படியான இடமும் தெரியுமாறு விவரமாக -முகாம்களை எழுதி அனுப்புகிறது" என்ற ஆணையால் காசி யாத்திரை முடித்துத் தஞ்சைக்கு வந்ததும் மன்னர் இராமேசுவர யாத்திரைக்குப் புறப்பட்டார் என்பது உறுதியெய்துகிறது. 1822 ஜனவரித் திங்கள் முதல் 21-5-1822 வரை முகாம் விவரங்கள் எழுதப்பெற்றதினின்றும்" மன்னர் 26-4-1822இல் இராமேசுவர யாத்திரையில் முக்தாம்பாள்புரத்திற்குச் சென்றதாகத் தெரிகிறது. 10-5-1822இல் இராமேஸ் வரத்தில் மன்னர் தங்கியிருந்தார் என்று ஒரு குறிப்பால் அறியலாம். 13-5-1822இல் அனுப்பிய உத்தரவில் "அரண்மனையில் நுழைவதற்கு நல்ல முகூர்த்தம் 2, 4 நாட்களில் தெரிவிக்கிறது' என்றுள்ளது. 15-5-1822 முகாம் கலியனேரியிலிருந்து போந்த உத்தரவில்" "ஹ-ஜாரின் ஸ்வாரி கோட்டைக்கு வந்ததும்காள பைரவருடைய சமாராதனை ஆகும் . ஆகையால் கொட்டியத்திற்குத் தொகை கொடுத்து முந்தியே ஜாக்கிரதை செய்யவேணும்' என்றுள்ளது. 18-5-1822 முகாம் சாலுவநாயக்கன் பட்டணத்திலிருந்து வந்த எழுத்தில்" - . பஹுஜூரின் சவாரி ஜேஷ்ட சுத்த துவிதியை புதன்கிழமை முத்தம்மா புரம் சத்திரத்தில் இருந்து புறப்பட்டுச் சைதாம்பாபுரம் சத்திரத்தில் காலை யில் போஜனம் செய்துகொண்டு நண்பகல் சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டு நீங்கள் எழுதின முகூர்த்தத்தின்படி அரண்மனையில் பிரவேசிக்கப் போகிறது. இரவில், சாப்பாடும் நகரம் அலங்காரமும் செய்து தயாராய் இருக்கவேண்டும்" என்றுள்ளதாலும். - . "முத்தாம்பாள்புர்ம் 21-5-1822” என்று முகாம் பட்டியலில் உள்ளதாலும்,

  • . 21-5-1822 மாலையில் மன்னர் இராமேசுவர யாத்திரை முடித்துக்

கொண்டு தஞ்சையை அடைந்தார் என்பது உறுதி. ੋਂ பட்டு வளர்ப்பு - - 28-3-1821- முகாம் புரஸ்தாபாதுக்கு அருகிலுள்ள ஹளபீம்பூரில் இருந்து எழுதியவற்றினின்று" பட்டு வளர்ப்புப் பற்றிய விளக்கங்கள் அறியப் பெறுகின்றன. . - - - - - - -- - = - * - * - - - - -- - - -- --- == --- - or 64, 5.18 முதல் 21 முடிய 65. 5-55 66, 5-58, 59 67. 5-59, 60 68. 5.79 முதல் 82 முடிய, -