பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 128 வங்காள தேசத்தில் உண்டாகிற பட்டுப்பூச்சிகள் அனுப்பப்ப்ெற் ஆறுள்ளன. அவற்றுள் சில மஞ்சள் நிறமுள்ளன : சில சிறிது மஞ்சள் நிறம், சில வெள்ளை நிறம். இவற்றுள் வெள்ளை மாதிரி மிக உயர்ந்தவை; ஆண்டுக்கு ஒரு முறைதான் உற்பத்தியாகும். வெள்ளைப் பட்டுக்குரியவை தஞ்சை சேரும்வரையில் பிழைத்திருந்தால், முட்டைகளை ஒரு பானையில் காகிதத்துடன் போட்டுப் பானையின் வாயை மூடிக் காற்றேர்ட்டம் இல்லாத இடத்தில் உரியில் வைக்கவேண்டும். மாசி மாதத்தில் காற்ற்ோட்டமாக வைத்தால் புழுக்கள் உண்டாகும். புழுக்கள் உண்டானதும் மூங்கில் தட்டியில் வைத்து இலந்தை இலைகளைப் பொடியாக நறுக்கிப் போடுதல் வேண்டும். இவைகள் வளர்ந்து ஆபட்டு ஆகும். மற்ற நிறத்துப் பட்டுப்பூச்சிகளையும் இந்த முறையிலேயே வளர்க்கலாம். இங்ங்னம் பட்டுவளர்ப்புப் பற்றி ஒரு ஆவணம் கூறுவது இன்பம் பயப்பதாயுள்ளது. இதனாலும் தம் அரசுக்கு உட்பட்ட பகுதியின் வளர்ச்சி பற்றிக் கண்ணும் கருத்துமாய் இருந்தார் மன்னர் என்பது போதரும். . இளைய திவானைப் பற்றிய நினைவு சரபோஜி மன்னருக்குச் சிவாஜி ஒரே மகனாவார். தாம் - காசி யாத்திரைக்குப் புறப்படுமுன் செய்த ஏற்பாட்டில் தம் மகனாரை அரச அலுவல்களைச் செவ்வனே பார்த்துக் கொள்ளுமாறு செய்ததுடன், பல முகாம்களினின்றும் தமது மகனுக்கு அறிவுர்ை வழங்கிவந்தார் என்பது அறியவருகிறது. - - -- -

  • H

24-5-1821க்குரிய கயையினின்று எழுதிய கடிதத்தில்" சிறிய திவான் (இளவரசர்) ரெஸிடெண்டுக்கு எழுதும் கடிதங்களில் பிழைகள் காணப்படுகின்றன என்றும், அப்பிழைகளைச் சிறிய திவானுக்கு எடுத்துக் காட்டித் திருத்தவேண்டும் என்றும் காணப்பெறுகின்றன. 11-9-1821 காசியிலிருந்து எழுதிய கடிதத்தில்" இளவரசர் கல்வி கற்கும்பொழுது கவனமாய்க் கற்க வேண்டும் என்றும் பாடங்க்ளை அவ்வவற்றுக்கு உரிய ஆசிரியர்களிடத்தில் கேட்டறிய வேண்டும் என்றும், அப்பொழுதுதான் ஆசிரியர்கள் மகிழ்வர் என்றும், காலத்தை வீணாக விளை யாட்டிலும் வீண்பேச்சுப் பேசுவதிலும் கழித்தல் கூடாதென்றும், இரவில் மூன்று நாழிகை வரையில் கற்கவேண்டும் என்றும், ஆசிரியர்கள் ஒவ்வொரு வரும் தாம்தாம் கற்பித்தவை இவை என்று குறிப்புவைத்து ஹாஜாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. --- 70 or 69, 5– 70. 5-69,