பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 11-9-1821 காசி முகாமினின்று எழுதியவற்றுள்." ...... பிரயாகைக்குப் போய் அந்த யாத்திரையை முடித்துக்கொண்டு பிரயாகையிலே காவடிகளைக் கட்டி முதலில் மா ஆவுசாகேப் அவர்களுடைய திவ்ய சரணத்திற்கும், பின்பு மா. கிரிஜாபாயி அம்மா, பின்பு பூநீராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகமும் தன் கையினாலே செய்யவேணும் என்ற அவசரம் ஹாஜ-வருக்குத் தோன்றியிருக்கிறது ' என்றும், 18-4-1821 ஹஸன் கஞ்ச் முகாமிலிருந்து எழுதியவற்றுள்." கங்கோதகத்தை மா. ஆவுசாப் அவர்களிடம் கொடுத்து அவர்களிடம் இருந்து எல்லோருக்கும் சேரும்படி செய்கிறது" என்றும் காணப்படுதலின் மன்னர்க்குத் தம் தாயாரிடத்தில் மிகுந்த பக்தியும் பற்றும் மரியாதையும் இருந்தமை தெற்றெனத் தெரியவரும். --- திருத்தல யாத்திரை லாவணி சரபோஜி மன்னர் காசி யாத்திரைக்குச் சென்று திரும்பியதும் தாம் தரிசித்த தலங்களைப் பற்றிய சிறப்புக்களைத் தம் குடிமக்கள் கேட்டு அறிந்து இன்புறுதற் பொருட்டு த்ரிஸ்தல யாத்ரேச லாவண்ய" என்ற பெயரில் மராட்டி மொழியில் ஒரு நூலை இயற்றச் செய்தார். இந்நூலில் மன்னர் சந்திரமெளலபக்தன், சரபநிருபன், சரபேந்திரன், சரபோஜி என்று குறிக்கப் பெற்றுள்ளார். இந்நூலின்கண் 62 தலங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. 64ஆவது (இறுதி) லாவணியில் இளவரசர் சிவாஜியும், மன்னரின் உறவினர் களும், பிறரும் சிதம்பரத்தில் மன்னரை வரவேற்றனர் என்றும், தஞ்சைக்கு வந்ததும் மன்னர் தம் அன்புத் தாயைக்கண்டு அவருடைய ஆசியைப் பெற்றார் என்றும் சொல்லியிருக்கிறது. - - - - இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பெற்றுள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் 87ஆவது வெளியீடாக 1951இல் திரு. கிருஷ்ணசுவாமி மாடிக் ராவ் சாகிப் பகதூர் அவர்களால் பரிசோதித்து ஆங்கில முன்னுரையும் சுருக்கமும் கொண்டதாக அச்சிடப்பெற்றுள்ளது. இந்நூல் ஆங்கிலச் சுருக்கத்தினால் இந்நூலில் கூறப்பட்ட விரிவான செய்திகளை அறிய வாய்ப்பு இல்லை. அண்மையில் டிை அன்பரால் இந்நூற்பாடல்கள் விரிவாகத் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளமையால் பெரிதும் பயன் அளிக்கும் என்பது உறுதி. T = இந்நூலைச் சரபோஜி மன்னர் யாத்தவர் அல்லர் என்றும், அவரது ஆதரவு பெற்ற "துண்டி சுத சிவ' என்ற புலவரால் எழுதப் பெற்றது என்றும், 82. 5-78 - 83. 3,112 - * h * இந்த லாவணி " நூல் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், திரு. கிருஷ்ணசாமி மாடிக் ராஜே சாகேப் அவர்களைக் கொண்டு அண்மையில் தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது,