பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அச் "சிவ” என்ற புலவரே "சரபேந்திர தீர்த்தாவளி" என்ற நூலையும் எழுதினார் என்றும், இச்சரபேந்திர தீர்த்தாவளியில் சோழநாட்டில் சரபோஜி செய்த தலயாத்திரை கூறியுள்ளது என்றும் ஒர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.8 ஆனால் உட்கே கோவிந்தாசாரியர் என்ற கவிஞர் காசிப்பயண வர்ணனை செய்து லாவணி இயற்றினார் என்று சில ஆவணக்குறிப்புக்களால் தெரியவருகிறது." இரண்டாம் சரபோஜியின் காசியாத்திரை பற்றிச் சிவக்கொழுந்து தேசிகர், தாம் பாடிய " சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் " எனும் நூலுள் செய்யுள் 9-இல், ' உலகமன் னவர்கள் உற்றெதிர் பணிய நலமுறு காசி நண்ணியொண் கங்கை மென்புனல் படிந்து விச்சுவ நாதன் தன்பத பங்கயம் தனையெதிர் பணிந்து வேண்டிய வரங்கள் விருப்புடன் ஏற்று நீண்டிடு மகிழ்ச்சி நிலவுற வந்தோன்' (வரி 35-40) என்று பாடியுள்ளார். ཟཟཟཟ 84. சரஸ்வதி மகால் நூல் கிலைய மராட்டி புலவர் திரு. பீமராவ் அவர்கள் 85. இசை நாடகம் காட்டியம்" என்ற கட்டுரையின் அடிக்குறிப்புக்கள்,-82, 88, 8.4, 85, 86 ஆகியவற்றுக்குரிய செய்திகளைக் காண்க, - -- o -