பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 1799 : உப்பளம் அதிராம்பட்டினம் நடை 1க்குத் தீர்வை 2 பணம்: தற்பொழுது 1 பணம் மூட்டைக்குத் தீர்வை 4 காசு, தற்பொழுது 2 காசு' என்ற ஆவணக்குறிப்பால்' உப்புவரி வசூல் செய்யப்பெற்றமை தெளிவு. அரசுக்குச் சொந்தமான உப்பளங்களினின்று உப்பு விற்றுமுதல் தொகை வருதலுக்கும் ஆவணக்குறிப்பு உண்டு. இதனை, "கட்டளவு மரக்கால் 8 வீதம் மரக்கால் 4082க்கு கலம் 340-2-0. நலி 1க்கு மரக்கால் 48வீதம் நலி 85க்கு மரக்கால் 2." வித்துமொதல் சக்ரம் 51, பனம் }" o என்றதால் அறியலாம். ஒரு பணத்துக்கு 8 மரக்கால் உப்பு என்பது இக்குறிப்பால் அறியலாம். 1826-27இல் கும்பினியார் வசூல் செய்த பொழுது உப்பு வருமானம் ரூ. 2,35,659-10-4 என்பது அறிதற்பாலது." பருத்தி பருத்தி ஆடைகளும் பட்டாடைகளும் தஞ்சைப் பகுதியில் நெய்யப்பட்டு நல்ல வருவாய் தந்து கொண்டிருந்தன. பட்டுவளர்ப்பில் இரண்டாம் சரபோஜி மிக்க ஊக்கம் உடையவராய் இருந்தமை ' தொழில்கள்" என்ற தலைப்பில்(23) கூறப்பெறும். பருத்தி பயிரிடுதலும் அதற்கு வரி விதித்தலும் உண்டு என்று தெரிகிறது. அவ்வரி பணமாகவே பெறப்படும். இது, " சுவர்ணா தாயம் பருத்தி 1799 என்ற குறிப்பால்' அறியப்பெறும். பருத்தியை நூலாக்கி ஆடைகள் நெய்யும்பொழுதும் ஒரு வரி செலுத்தவேண்டியிருந்தது. அது " மோதுர்ஃபா " என்று குறிக்கப்பெறும், இதனைத் தறி வரி எனலாம். தறி வரியாகக் தி. பி. 1826-27இல் கும்பினியார் 8296 ரூபா வசூலித்தனர் என்று தெரிகிறது". i- சில வரிகள் சில சிறிய வரிகள் விதிக்கப்பட்டு வந்தமைக்குச் சான்றுகள் உண்டு. கொடிக்கால் (வெற்றிலை பயிரிடல்), புஞ்சை பத்துக்கட்டு (புன்செய்நிலங்களில் பயிரிடல்), நவராத்திரி வரி, சங்கராந்தி வரி, போஸ்டு வரி, தீபாவளி வரி முதலாகிய வரிகளும் வசூலிக்கப்பெற்றனவாதல் வேண்டும்". == 14. 5–292. 15. க ை85க்கு மரக் கால் 2 என்பது தவறு; 48x85 = 4080 ஆகும். இதனை கலி 85, மரக்கால் 2க்கு என்று படிப்பது பொருந்தும். கலி எனபது 6 கட்டளவு என்று தோன்று - கிறது. 16. 1-129, 130 --- 17. 1-322 18. 1–185 19. அடிக்குறிப் 12இல் காண்க 20, 1-82? 21. ச. ம. மோ. ந. 28.6