பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 முத்திரைப் பத்திரம் விற்றுமுதல் வழக்கு மன்றங்களில் வழக்குத் தொடுத்தல், ஆவணங்களின் படிகளைப் பெறுதல், ஒப்பந்தங்கள் முதலியவற்றுக்கெல்லாம் அரசாங்க முத்திரையிட்டி ஒலை அல்லது காகிதத்தில் எழுதவேண்டும் என்பது அந்நாளைய நியதியாகும். இதனை, --- முத்திரைப் பத்திரங்கள் வித்துமுதல் காகிதம் 18 ஒலை 12 க்கு 4; சக்கரம் ' என்ற குறிப்பால்: அறியலாம். கும்பினியார் 1826-27இல் இந்தத்தலைப்பில் வசூலித்ததொகை ரூபா 52695 எனின் இந்தத் தொகைக்குக் குறையாமல் எப்பொழுதும் வசூல் செய்யப் பெற்றிருக்கக்கூடும் என்று கருதலாம். அபராதம் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனையாக அபராதம் விதித்தல் பெரும்பான்மை. "1755 : அபராதம் வகையில் வசூல் : இராயமுண்டான்பட்டியில் குடியானவன் காவல்காரனைத் தள்ளினதால் அபராதம் தஞ்சாவூர்ச் சக்கரம் 3-1 பணம் ' என்பதுபோன்ற பல ஆவணங்கள்' அபராதம் விதித்தல்பற்றிப் புகலும். இந்த வகையில் வந்த தொகை நியாயம் வழங்கும் அலுவலர்கட்கு ஊதியம் வழங்கப் பயன்படுத்தப்பெற்றது என்று கருதலாம். பாசிக்குத்தகை குளம் குட்டைகளில் மீன் பிடித்தற்காக ஏலம் விடப்பெறும். இதுவே பாசிக்குத்தகை எனப்பெறும். - - - ' 1839 : பாபநாசம் தாலுகாவில் பொதுப் பாசிக் குத்தகைக்காரர் மருதமுத்துப் படையாச்சி 胃1_在 1829 : மொட்டையனிடம் மீன் குத்தகைக்கு விட்டகுளம் குட்டைகள் திருச்சேறைத் தோட்டம் குளம், ராஜகிரி தோட்டம் குளம் . கும்பகோணம் கருப்பூர் தோட்டம் குளம் 28 சக். 4 பனம் 'ர்ே என்ற ஆவணக்குறிப்புக்களால் பாசிக்குத்தகையான் சர்க்காருக்கு ஒரு சிறிது வருமானம் வந்தமை பெறப்படும். 21.அ திே மன்றங்கள் (14) அடிக்குறிப்பு 81.66 காண்க 22. ச. ம. மோ. க. 7-24 23, 1-323 24. 4-177, 178 25. நீதிமன்றங்கள் (14) அடிக்குறிப்பு 98 முதல் 112 வரை காண்க 26. ச. ம. மோ, த, 28-48 27. ச. ம. மோ, த, 4-12