பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சுங்கவசூல் உள்நாட்டில் சுங்கச் சாவடிகள் இருந்தன. எல்லாப் பொருள்களுக்கும் சுங்கவரி கொடுத்தே எடுத்துச் செல்லவேண்டும். கும்பினி நிலவரி வசூல் உரிமை மேற்கொண்டபிறகு மராட்டிய சர்க்காருக்குச் சுங்கவரி குறைந்து விட்டது. அவர்தம் ஆட்சி உச்சநிலையில் இருந்தபொழுது 67 ஆயிரம் சக்கரம் சுங்கவரியாக வந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னர் அதற்குப் பாதி கூட வரவில்லை என்று அவ்வாவணத்தினின்று அறியவருகிறது. பொருள் களின் எடைக்கேற்பவும், அவற்றை எடுத்துச்செல்லும் தொலைவுக்கு ஏற்பவும் சுங்க வரி வசூலித்ததாகக் கொள்ளலாம். சுங்க வரிக்கு விலக்குத் தருவதும் உண்டு என்பது பிற்கண்ட ஆவணக்குறிப்புக்களால் அறியப்பெறும் : 1780 : பாரிஸ் துரைக்கு வருகிற நெல் கலம் 6000 சுங்கத்தில் வரவு வைத்து விட்டுவிடுகிறது. ” 1780 : ராஜகோபாலசுவாமி வகையறா மூன்று சுவாமிக்கு வரும் சாமான்களைச் சுங்கத்தில் வரவு வைத்துக்கொண்டு விட்டுவிடுகிறது." அரண்மனை வேலையிலிருந்த ஏழை மக்கள் தம் ஊர்களிலிருந்துநெல் அரிசி சோளம் மொச்சை ஒரு ஆள் தூக்கும்படியானவற்றைக் கொணர்ந்தால் கங்கவரி 5 நாட்களுக்குக் கொடுக்க வேண்டியதில்லை என்றும், ஒரு முட்டைக்கு மேல் கொணர்ந்தால் தீர்வை கொடுக்கவேண்டும் என்றும் ஓராவணக்குறிப் பினால் அறியப்பெறும். எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி வாங்க வேண்டுமோ அவ்வளவு வரிக்கு மேல் மிகுதியாக வாங்கினால் அச்சுங்க அதிகாரி தண்டனைக்கு உள்ளாவர். - ---- - . ... " - 1768 : திருவாரூர்ச் சுங்கத்தில் திருச்சிராப்பள்ளிக்கு நவாப் சாஹே புடைய மட்டக்குதிரையைக் கொண்டு போனதற்குச் சுங்க அதிகாரி அதிக வரி எழுதினதால் அவனுக்கு அபராதம் சக்கரம் 1-2 பணம் விதிக்கப்பட்டது." என்கிறது ஓராவணம். வெள்ளையர்கட்கு மராட்டிய அரசில் கடுமையாகச் சுங்கவரி விதிக்கப் பட்டது என அறியவருகிறது.

  • .. ஐரோப்பியர் யாராவது ஒருவர் வந்தால் அவர் எங்கிருந்து ராஜ்யத்தில் புகுகிறாரோ அங்கங்குச் சுங்கவரி வசூலிக்க வேண்டும். அது எவ்விதம் என்றால், ஐரோப்பிய சர்தார் நடந்துவந்தால் ஒவ்வொரு ஆளுக்கும் ஐந்து வாகன் விதமும், குதிரையின்மேல் சவாரி செய்து வருபவர்க்கு அதற்கு

28, 5–867, 368 29, 3-1 5 {} 30. ச. ம. மோ. த. 5.25 31, 2-1