பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14| அதிகமாகவும், ஐரோப்பியர்கள் யாராவது பல்லக்கில் உட்கார்ந்து வந்தால் அவர்களுக்கு விசேஷ வரியும், மற்றும் சேனையை அழைத்துக்கொண்டு யாராவது ஒரு ஐரோப்பிய சர்தார் வருவதாயிருந்தால் மகாராஜாவுக்கு முன்பே சொல்லியனுப்பி, வரி வசூலிப்போருக்கு வரியை வசூலிக்காமல் இருக்குமாறு உத்தரவு போடுவது வழக்கமாயிருந்தது. தற்காலம் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பியர்கள் சமஸ்தானத்துக்கு வேண்டியவர்களாய் இருக் கிறார்கள். மேலும் அவர்கள் வருவதும் போவதும் இனிமேல் எப்போதும் இருக்கும். அதிலும் சைனியத்தோடு வருபவர்கள் நிச்சயமாய் நமக்குத் தெரிவித்துவிட்டுத்தான் வருவார்கள். மற்றும் வரும் ஐரோப்பியர்கள் எத்துறைமுகத்திலிருந்து எப்படி வந்தாலும் அவர்கள் கொடுக்க வேண்டிய வரியைத்தள்ளிவிட உத்தரவு வேண்டியதில்லை " இது இரண்டாம் துளஜாவின் உத்தரவு. இதனால் இரண்டாம் துளஜா காலத்துக்கு முன் ஐரோப்பியரிடம் இருந்து வசூலித்த வரியின் சுமையை ஒருவாறு அறியலாம். இரண்டாம் துளஜா கும்பினியாருக்கு அடங்கி அவர்க ளுடைய தயவிலே வாழவேண்டிய நிலை ஏற்பட்டமையின் மேற்கண்ட வண்ணம் வரிநீக்க உத்தரவு பிறப்பித்தார் என்று ஊகித்தறியலாம். சாராயக்குத்தகை சாராயம் காய்ச்சும் உரிமை அரசாங்கத்துக்கே உரியது. ஆகவே அதைக் குத்தகைக்கு விட்டனர். 1776 : கள்ளுக் குத்தகையில் வந்த வருமானம் ஒரு வருஷத்துக்கு -5. 39,972 " என்று ஒரு ஆவணக்குறிப்பில்’ உள்ளது. தஞ்சை நகரம் மட்டும் தமக்கு உரியதாய் இருந்த காலத்திலும் இக்கள்ளுக்குத்தகை வருமானம் மிகுதியாகக் குை றயவில்ல்ை. இதை 5T, 1828 சாரரயம் கள்ளு வகையறா குத்தகை - மூன்று வருஷத்துக்கு 30,420 ரூபாய்க்கு ஒப்புக்கொள்ளும்படிக்கு அன்வாஜி நோயாள இரண்டுபத்திரம் எழுதிக்கொள்ளுகிறது ” என்ற் குறிப்பு வலியுறுத்தும். கி. பி. 1841இல் மாதம் 1க்கு @5・ 760 வீதம் குத்தகை தருவதாகவும்,' 1817இல் மாதம் 1க்கு ரு, 190 தருவதாகவும்" குத்தகை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. - - 32 போன் ஸ்லே வம்ச சரித்திரம் (தமிழ்) பக்கம் 111, 112 33. ச. ம. மோ, த, 5-24 34. ச. ம. மோ, ச. 2.85 35. மி, மோ, தி. 4-6 36. 47, LD, மோ, ఛ్ , Q-30