பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 குத்தகைக்கு விடாமல் சாராய விற்பனை சர்க்காரிடத்திலேயே இருந்த தாகவும் தெரிகிறது. - - கோட்டையில் காளேராவப்பா என்பவர் காலத்தில் 10 சேர் செம்பினால் செம்பொன்றுக்கு 8 பணம் வீதம் விற்பனை செய்யப்பெற்றது ; விற்பனை செய்பவனுக்கு 1 பணம் சம்பளம். பின்னர் நீலகண்ட பிள்ளையின் காலத்தில் மூன்றுவிதமாகப் பிரித்தனர். ஒரு செம்பு 12 பணம் : 1.1 பணம் ; 10 பணம் ; விற்பவனுக்கு வழக்கம்போல் செம்பொன்றுக்கு 1 பணம். கி. பி. 1811இல் திருவையாறு தாலுகா சாராயக்கடைக்காரன் கோட்டைக்கு வெளியே சாராயக்கடை வைத்தான் ; குறைந்த விலைக்கு விற்றான் ; அதனால் குடிப்பவர்கள் கோட்டைக்கு வெளியே சென்று குடித்தார்கள். சர்க்கார் கடையிலுள்ள சாராயம் விற்பனை ஆகவில்லை. ஆகவே செம்பொன்றுக்கு 9 பணம் வீதம் விலை அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது: தஞ்சாவூர்க் கிடங்கில் காய்ச்சும் சாராயம் யானை குதிரை முதலியவற் றிற்கு வேண்டிய அளவு எடுத்துக்கொண்டு எஞ்சியது விற்பனை செய்யப் பெற்றது. அவ்விற்பனைத்தொகை, " மேஸ்தர் ராமனுடைய மாடியில் வைத்திருக்கும் தர்ம பள்ளிக்கூடத் திற்குக் கொடுப்பது வழக்கம் " என்ற குறிப்பு சாராய விற்பனைத்தொகை கல்விக்கெனச் செலவிடப் பெற்றமை அறிய உதவுகிறது. சாராய வரி என்ற ஒருவகை வரியும் வசூலிக்கப்பட்டது. 1765 : நாகூர்பந்தர் ; தெற்கிலிருந்து வடக்கே சாராயத்தின் குப்பிகள் 10ஐக் கொண்டுபோனதற்கு வரி துரையினிடமிருந்து வெள்ளிப் பணம் 6 ' என்றமையால் சாராயம் எடுத்துச்செல்ல வரி வசூலிக்கப்பட்டது என்று அறியப்பெறும். - இந்தத் தலைப்பில் கி. பி. 1826-27 இல் கும்பினி பெற்ற வருமானம் ரூ. 34,206 என்று அறியவருகிறது." இது ஆப்காரி ' எனப்பெற்றது. தோட்ட வருமானம் சர்க்காருக்குப் பல தோட்டங்கள் இருந்தன. அவற்றுள் சில அரச மாதேவிகளுக்குரியனவாயிருந்தன என்னலாம். 1815க்குரிய ஓராவணத்தில் 70 தோட்டங்களின் பெயர்கள் தரப்பெற்றுள்ளன. 1818க்குரிய ஆவணத்தில் 94. தோட்டங்கள் என்றும் அவற்றுள் 7 வருமானம் இல்லாதவை என்றும் 37, 2-83, 84 38. 7.672 39, 2–15 40. 1-322 41. ச. ம. மோ. த. 28-பக்கம் 15 முதல் 17 வரை