பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அவரால் சேர்த்துக் கொள்ளப்பெற்ற மனைவியர் ஒன்பதின்மர். அவர்கள் ஈன்றெடுத்த மக்கள் எழுவர். இவர்கள் அரசுக்குரிமையுடையவர் அல்லர்." ஏகோஜியின் முதல் மகன் சாஹஜிக்கு ஒரே மனைவி சிம்ாபாயி. இவருக்குக் காமக்கிழத்தியர் பலர். இவர்க்குப் பிள்ளைகள் இல்லை. சாஹஜியின் தம்பி முதலாம் சரபோஜி. இவருக்கு சுலக்ஷனாபாயி, அபருபாபாயி, ராஜஸாபாயி என மனைவியர் மூவர்." சரபோஜியின் தம்பி துக்கோஜிக்கு ஐந்து மனைவியர். இவர் சேர்த்துக் கொண்ட மன்ைவியர் அறுவர். ஐவர் நாயுடு பிரிவைச் சேர்ந்தவர். ஒருவர் மராட்டிய குலத்தவர்; அன்னபூர்ணாபாயி என்று பெயர்; கத்திக் கலியாணம் செய்துகொள்ளப்பட்டவர்; இவ்வம்மையார் ஈன்றெடுத்தவரே பிரதாபசிம்மர். துக்கோஜிக்கு ஐந்து மக்கள் : பாபா சாகேபு, சையாஜி, அண்ணா சாகேபு, நானா சாகேபு, பிரதாபசிம்மர் என்பவர் ஆவர். முதல் இருவர் மராட்டிய மனைவியர்க்குப் பிறந்தவர். பிரதாபசிம்மர் பற்றி மேலே எழுதப் பட்டது. பாபாசாகேபு தன் தந்தைக்குப் பின் அரசரானார். இவருக்கு இரண்டாம் ஏகோஜி என்றும் பேருண்டு. இவர்க்கு ஐந்து மனைவியர்; தவிர, சேர்த்துக்கொள்ளப் பெற்றவர்கள் மூவர். பிரதாபசிம்மர்க்கு ஐந்து மனைவியர் ; சேர்த்துக்கொள்ளப்பட்டவர் ஏழு பேர். இவர்க்குப்பின் அரசாண்ட இவர் மகன் இரண்டாம் துளஜா ஆறு பேரை மணந்தார்; இவரால் சேர்த்துக்கொள்ளப்பெற்றவர் யாவர் என்று தெரியவில்லை. இரண்டாம் சரபோஜிக்கு மனைவியர் இருவர். இவரது காமக்கிழத்தியர் பலர். அவர்கள் கலியாணமகால் மகளிர் எனப்பெறுவர். சிவாஜிக்கு முதலில் மனைவியர் மூவர். பின்னர் ஒரே நாளில் 17 பேரை மணந்தார். இவர்களை மணந்த மூன்றாண்டுகட்குப் பிறகு இறந்தார். இவருடைய காமக்கிழத்தியர் மங்களவிலாஸ் சத்மத்தார் எனப்பெறுவர். அவர்கள் நாற்பத்திருவர். - - - இவ்வரசர்களுடைய மனைவியர்களுட் பலரும், காமக்கிழத்தியர் பலரும், தத்தம் கணவன்மார் இறந்த பிறகு பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர் என்று தெரிகிறது. கலியாண மகால் மாதராரும், மங்களவிலாஸ் மாதரரும் இங்ஙனமே பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர். எனவே அரச குடும்பம் அல்லது அரசரோடு பொருந்திய பெண்டிர் - செல்வ வளம் பொருந்தியவர் ஆயினும் கைம்பெண்களாக இருந்த அவலநிலை ஏற்படலாயிற்று. 1 பக்கம் 79, போன்ஸ்லே வம்ச சரித்திரம். 2 பக்கம் 80, போன் ஸ்லே வம்ச சரித்திரம். 3 Page 242, Maratha Rule in the Carnatic-C. K. Srinivasan,