பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 1000 காசுகள் தயாரிக்க 3 பணம் (அதாவது 96 காசுகள்) செலவு என்றும், ஒரு பலம் எடைக்கு 24 காசுகள் செய்யப்பெற்றன என்றும் ஒரு குறிப்பினால்' அறியப்பெறுகிறது. - ... "

  • - எனவே நாணயங்கட்குத் தேவை ஏற்படும்பொழுது சர்க்காரே அச்சிட்ட தாதல் வேண்டும்; அல்லது வேண்டிய அளவு தயார் செய்து கொடுக்குமாறு குத்தகைதாரரிடம் விட்டிருத்தல் வேண்டும் எனத்தெரிகிறது. ----- அமர்சிங்கு காலத்துக்கு 50 ஆண்டுகட்குமுன் தரங்கம்பாடியில் பிரதாப் சிங்கு காலத்தில் சர்க்கார் நாணயங்கள் அடிக்கும் தொழிற்சாலை ஒன்று இருந்தது. இத்தொழிற்சாலையில் அவ்வேலை செய்பவருக்கு மாதம் ஒன்றுக்கு மூன்று வராகன் ஊதியம் தரப்பெற்றது". அத்தரங்கம்பாடி தங்கசாலையில் செய்த நாணயங்கள் யாவை என்று தெரியவில்லை.

இந்நாட்களில் செலாவணியாகாத தேய்ந்த நாணயங்களை, அரசே பெற்றுக்கொண்டு. அச்செல்லாத நாணயங்களின் மதிப்புக்கொண்ட நாணயங் களையோ பிற நாணயங்களையோ கொடுப்பது பழக்கமாகும். நாணயங்களை அச்சிடுதலும் வெளியிடுதலும் அரசாங்கப் பொறுப்பாகும். நாணயங்களை அச்சிடும் தங்கசாலைகள் (Mint) அரசுக்கே உரியனவாம். நாணயங்கள் வெளி விடுதலால் ஆகிய வரவும் இழப்பும் (இலாபமும் நஷ்டமும்) அரசுக்கே உரிய னவாம். சில்லறை நாணயங்களை வெளியிடுதல் முன்னாட்களில், குறிப்பாகத் தஞ்சை மராட்டியர் காலத்து அரசாங்கப் பொறுப்பாக இருந்ததா என்பது ஐயத்துக்கு இடம் தருகிறது. கி. பி. 1780இல் திருமருகலில் நாணயங்களைத் தயாரிக்கும் வேலை குத்தகைக்கு விடப்பட்டது" என்றமையாலும், "ஆயிரம் காசு தயார் செய்ய மூன்று பணம்" என்றாற்போன்ற குறிப்புக்களாலும் நாணயங்கள் தயார் செய்வதால் ஆகும் செலவும் குத்தகைதாரருடைய இலாபமும் சேர்த்துத்தான் நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. என்பது அறியப்பெறும். அங்ங்னமாயின் நாணய வெளியீடு அரசாங்கத்துக்கு ஓரளவு வருமானம் தரும் செயல் ஆகிறது; நாணயங்களைப் பயன்படுத்தும் ஏழைக்குடி மகன் அந்தச் செலவை ஏற்பவனாகக் காணப்படுகிறான். * - " ------. முதலாம் ஏகோஜி தஞ்சையில் மராட்டிய அரசை நிறுவியவர். இவர் டச்சுக்காரர்களோடு 30-12-1676இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் "பணம், வராகன்' ஆகியவற்றை அச்சிட்டு வழங்கும் உரிமையை டச்சுக்காரர்களுக்கு அளித்தார் என்றும் இலாபத்தில் பாதி ஏகோஜிக்கு உண்டு என்றும் தெரிகிறது." 46, 6–5 47.طاق) .اما . تمهr. 5.8 - 5 48. ச. ம. மோ. க. 8-27 49. 6–5 50. A. R. E. for 1935-36, Part ii, Paragraph 81 : * **** . -மராட்டியர் செப்பேடுகள் ஐம்பது-தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு முேதல் செப்பேச -ஏகோஜியின் வெள்ளிப்பட்டயம்: வரி 45-524 ஐந்தாவது பகுதி: