பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 நாணயக் கண்காட்சி மேலே கண்ட நாணயங்கள் ஒவ்வொரு வகையிலும் பலப்பல இருந் திருத்தல் கூடும். இரண்டாம் சரபோஜி அவர் மகன் இரண்டாம் சிவாஜி ஆகியோர் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் சேமித்து இருந்த பல்வகை நாணயங்கள் 18-12-1854இல் ஒரு கண்காட்சிக்காக இரண்டாம் சிவாஜி ரெஸிடெண்டுக்கு அனுப்பினார்' என்று ஒரு குறிப்பு" விளம்புகிறது. கண் காட்சி எங்குநடந்தது எப்பொழுது நடந்தது என்பவை பற்றிய விபரம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அந்த நாணயங்கள் திரும்பிவந்திருத்தற்கும் ஏது வில்லை. ஏனெனில் 1855இல் சிவாஜி இறந்துபோய் அரசே குழப்பத்தில் இருந்தமையான் என்னலாம்.