பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நீதி மன்றங்கள் ஆட்சி நன்கு நடைபெற வேண்டின், அரசனாலும் அரசனது அலுவலர் க்ள்ாலும் கள்வராலும், பகைவராலும், விலங்குகளாலும், பிற உயிர்களாலும் குடி மக்கட்குத் தீங்கு நிகழாதவாறு அரசன் கண்ணுங் கருத்துமாய்ப் பார்த்துக் கொள்ளல் வேண்டும். குடிமக்கள் அமைதியோடு வாழ வேண்டும் எனின் அவர் தமக்குள்ள குறைகளைப் போக்குவதற்கு வழிவகைகளை வகுத்தல் அரசனது கடமைகளுள் ஒன்று ஆகும். அரசன் பல துறைகளையும் கவனிக்க வேண்டியவன் ஆகலின் நீதி வழங்குவதற்கு நீதி மன்றங்களை அமைத்து நீதியை நிலைநாட்டுவது எங்கும் காணும் சிறந்த முறையாகும். இரண்டாம் சரபோஜி காலத்துக்கு முன் இருந்த நீதிவழங்கும் முறை பத்றி விவரமாக அறிய முடியவில்லை. அமர்சிங்கு காலத்தில் நியாயாதிபதிகள் ஒருங்கற்ற்ள் என்றும், அவர்தம் ஒழுங்கீனத்தைப் போக்கத் தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸர் ஆர்ச்சிபால்டு காம்பெல் (கவர்னர்) அவர்களிடம் ஸ்வார்ஷ் பாதிரி முறையிட்டார் என்றும் தெரியவருகிறது. அமர்சிங்கை வெளியேற்றித் தஞ்சை அரசுக்குரியரான சரபோஜி II காலத்தில் சிறந்த முறை யில் நீதி வழங்க நான்கு நீதிமன்றங்கள் தோற்றம் பெற்றன”. அந்நான்கு மன்றங்கள், முத்திரித சபை, தரும சபை, நியாய சபை, நியாயாதீச சபை என்பனவாம். 1. In Amar Singh's time atleast, the judges were hopelessly corrupt. Schwartz had to appeal to Sir Archibald Campbell, Governor of Madras to contro! Judicial Corruption there - Page 242, History of Tamil Nad by N, Subramanian "The four-fold judiciary came into existence only after 1800" - Page 242' History of Tamil Nad By N. Subramanian 3, 9–92; 9-94 2.