பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 ' கும்பகோணம் ஜில்லா கோர்ட் ஜட்ஜ் மேஸ்தர் மேண்டாஸ் பாண்டு, மேஸ்தர் ரிசிடெண்ட் கிண்டர்சிலி ஹாஜுருக்குப் பேட்டிக்கு வந்ததற்கு அவர்களுடைய தலாயத்து சேவகர்களுக்கு இனாம் 23; ரூ.' " என்ற குறிப்பால் கும்பகோணம் போன்ற ஊர்களில் கும்பினியார் நீதிமன்றங்கள் அமைத்தனர் என்பது தெரியவரும். சென்னைப் பட்டணத்தில் அந்நாளில் ஒரு உச்ச நீதி மன்றம் இருந்தது. அதை Supreme Court என்றனர். இந்த உச்ச நீதி மன்றத்துக்கு மேல் முறையீட்டுக்காக அடிக்கடி மராத்திய அரசு அலுவலர் சென்றுவந்தனர் என்றும், சரபுேஜி II காலத்தில் அன்னோர் மிக மரியாதையாக நடத்தப் பெற்று விரைவில் விசாரணை செய்யப்பெற்றனர் என்றும், சிவாஜி II காலத்தில் அங்ங்ணம் நடைபெறவில்லை என்றும் இரண்டு ஆவணங்கள்' பகர்கின்றன. 1801இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் சட்டம் ஒன்றினால் சென்னை யில் ஒரு சுப்ரீம் கோர்ட்டு (உச்சநீதி மன்றம்) ஏற்படுத்தப்பெற்றது. இது சென்னை மாகாணத்தில் வெள்ளையருக்கு அடங்கிய பகுதிகளிலும் சார்புடைய பகுதிகளிலும் உள்ள மக்களின்மேல் சட்ட ஆட்சிமுறையை உண்டாக்கியது. இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நீதி மன்றமாக இயங்கியது : கவர்னர் சபைக்குப் புறம்பாகச் சுயேச்சையாக இயங்கியது. மாவட்ட நீதிமன்றங்களும் நிறுவப்பெற்றன என்று முன்னரே கூறப்பட்டது. ஆகவே இரண்டு வகை யான நீதிமன்றங்கள் தோன்றலாயின என்னலாம். ஒன்று பிரிட்டிஷ் அரசு நிறுவிய உச்ச நீதி மன்றம் ( Supreme Court) , பிறிதொன்று கும்பினியார் நிரலே நிறுவிய நீதிமன்றத் தொடர் சதர் அதலட் என்ற நீதிமன்றமும், பெளஐதரி அதலட் என்ற நீதி மன்றமும் தோன்றின. மாகாண நீதி, மன்றங்களினின்று மேல் முறையீட்டுக்குச் சதர்அதலட் மன்றத்துக்குப் பொது வழக்குகள் (சிவில்) செல்லும் : பெளஐதரி அதலட்டுக்குக் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் செல்லும். இவ்விரு மன்றங்களுக்கும் கவர்னரும் அவருடைய சபையினரும் நீதிபதிகள் ஆக அமர்ந்து வழக்கு விசாரணை செய்வர்." 86. ச. ம. மோ, த. 2-48 87. 1-216, 217 88. An act of Parliament constituted the Supreme Court of Judicature at Madras (P.200) ......... For the first time in the history of the Presidency a central Court, bestowed with jurisdiction over all the inhabitants in territories, subject to or dependent upon it, was created. It functioned as a Court of the Crown and it exercised its powers independent of the Governor in Council (p.261) - History of Tamil Nadu (1565–1965) by K. Rajayyan == 89. The Governor and members of his Council constituted themselves into Sadar Adalat or Chief Court of Civil Judicature for hearing appeals from provincial courts of appeal and Foujdary Adalat or Chief Criminal Court for hearing appeals from the circuit Courts - P. 267, History of Tamil Nadu by K. Rajayyan