பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பூநீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கும் பூரீ சிருங்கேரி மடத்து அதிபர் களுக்கும் திருஆனைக்கா அகிலேண்டேசுவரி அம்மனுடைய தாடங்கம் (காதணி) புதுப்பித்தணிவித்தல்பற்றி 7 ஆண்டுகள் வழக்கு நடந்தது". அது திருச்சி சதர் அமீன் கோர்ட்டில் நடந்தது". சதர் அமீன் கோர்ட்டில் தோற்ற தும் திருச்சி சிவில் கோர்ட்டில் அப்பில் வழக்கு அதிலும் தோற்றபிறகு சிருங்கேரி மடத்தினர் சதர் அதலட் என்ற உயர்மன்றத்தில் முறையீடு செய்தனர். இதனான் மாகாண வழக்கு மன்றங்களினின்று மேல் முறை யீட்டுக்கு வருபவை சதர் அதலட் என்ற மன்றத்துக்கு வரும் எனத் தெரிகிறது." நிதி மன்றங்களைப் பற்றிய ஆவணங்கள் 1801 இலிருந்துதான் காணப் படுகின்றன. ஆனால் குற்றவாளிகட்குத் தண்டனை வழங்குவது பற்றி 1768 முதல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தண்டனைகளில் பல வகைகள் காணப்படுகின்றன : பணத் தண்டனை (அபராதம்) விதித்தல்', தேங்காய் இத்தனை என்று வசூலித்தல்," விலங்கிட்டு வேலை வாங்கிக் கொண்டு அடித்து விட்டுவிடுதல்", ஊர் சுற்றச்செய்து பின்அடி அடித்து விட்டுவிடுதல்," சிறையிலடைத்தல் முதலியனவாம். திருட்டுப் பொருளை வாங்குதல் குற்றம். சில பெண்கள் கொத்தங்குடி யில் குறத்தியிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கியதால் 1 சக்கரம், 2 பணம் அபராதம் விதிக்கப்பட்டது (கி. பி. 1777)" என்றதினின்று தண்டனை எத்தகையது என்றறியலாம். கி. பி. 1777 ; ஒருவன் வரிப்பணத்தைச் செலுத்தவில்ல்ை அதனால் அதிகாரி அவனை அடித்தார். அதனால் அவன் பிராமணனுக்குள்ள மரியாதை நீங்கியதாகக் கருதினான், ஊரார் யாரையும் ஒருங்கு சேர்த்தான்; 'ஊரைவிட்டுப் போகிறோம் ; வரித் தொகையைச் செலுத்த மாட்டோம்' என்று கட்டுப் 90, 4-265, 266 91. ... In the year 1844 the authorities of Sri Sringeri Matha filed a Civil suit in the Trichi Dt. Sadar Amin Court that the right for the Tatanka Fratishta of Goddess Akhilandeswari belonged only to that Matha-P-405, Preceptors of Advaita (59) Sri Kama Koti Pitha. * 92. “ The Principal Suder Ameen rejected the plaintiff’s claim, and decree of this officer was confirmed by the Acting Civil Judge in appeal ............ ... The special appellant now impugns the justness of these . degrees, but the court of Sudr Adlat having carefully considered his objections urged against them are of opinion that no good or legal grounds exist which would justify the admission of special appeal in the case” - Extract from the pro. of Sadar Adalat dated 11-8-1848, Listh 20-21, sreka பூரீ பெரியவர்களின் பூரீபராபரகுரு ஸ்வாமிகளின் விருத்தாந்தம், பிருந்தாவனம் டிரஸ்டு வெளியீடு, கும்பகோணம் (1981) 93. 1-59 94. 1-175 95. 1-317 96, 4–888 97. 1-59