பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தனக்குரிய தல்லாத நகையை அடகு வைத்தல் பெரிய ஏமாற்றுவித்தை யாகும் , இங்ங்னம் செய்த ஒருவன் 6 ஆண்டு சிறையிலடைக்கப்பட்டான் ; தீர்ப்பைத் தம்பட்டம் அடித்துத் தெரிவித்தலும் ஒரு அங்கமாயிற்று.'

கன்றுக்குட்டி இறத்தல் : மனுவின் மகன் ஊர்ந்த தேரில் அகப் பட்டுக் கன்றுக்குட்டி இறந்தது : மனுவோ அந்தக் குற்றத்துக்குத் தன் மகனையே தேர்க்காலிடைக் கிடத்திக் கொன்றான் - இது பெரிய புராணத்தா லறிவது. இதுபோன்று இரண்டு நிகழ்ச்சிகள் மோடி ஆவணத்தமிழாக் கத்துள் காணப்பெறுகின்றன. ஒரு பிராமணனுடைய கன்றுக்குட்டியை ஒருவன் அடித்துக்கொன்றான். சரஸ்வதி மகால் தரும சாஸ்திரிகள் விஞ்ஞானேசுவரீயம் முதலிய நீதி நூல் களைப் பார்த்துத் தீர்ப்புக் கூறினர். ' கன்றைக் கொன்றவனிடம் இருந்து ஒரு கன்றுக்குட்டி வாங்கிக் கொடுக்கலாம் அல்லது அதன் விலை கொடுக்கலாம்; கொடுக்காவிடில் அவன் சொத்தைப் பறிமுதல் செய்வது ; நெற்றியில் முத்திரை யிட்டுத் தமுக்கு அடித்துக் கோட்டை வெளிக்கு அப்பால் கொண்டுபோய், விட்டுவிடுதல் " என்பது அன்னோர் தீர்ப்பு." - - மேலும் ஒரு வழக்கு ஒருநாள் இரவு 8 மணி : வீரவாகு என்ற வண்டிக் காரனுடைய தம்பியின் மகன் வண்டி ஒட்டிச் சென்றான் அவனுக்கு வயது 18. வண்டியோடு வீரவாகு வந்துகொண்டிருந்தான். வண்டி 4 மாதக் காளைக் கன்றின் மேலே ஏறக் கன்று இறந்தது. இந்தக் குற்றத்திற்காக வீரவாகு 1 சக்கரம் 2 பணம் அபராதம் விதிக்கப்பெற்றான். மேலும் கன்றுக்குட்டியின் விலையைக் கன்றுக்குட்டியின் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டும். என்று தீர்ப்புக் கொடுக்கப் பெற்றது". முதலதில் கன்றை அடித்துக் கொன்றமையால் தண்டனை கடுமையாக இருந்தது! . | திருட்டுக் குற்றத்திற்குக் கடுமையான முறையில் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. ஒருவன் அதிராம்பட்டணம் முத்து வியாபாரியின் முத்துக்களைத் திருடினான்; அவன் சிவப்புக்கம்பத்தில் கட்டி 6 அடி அடிக்கப்பட்டான்". ஒரு பெண்ணின் கழுத்திலுள்ள தங்க மணியை ஒருவன் திருடினான்; அவனுக்கு 2 மாதம் சிறை , காலில் விலங்கு மராமத்து வேலை செய்தல்; பின்னர் 12 அடி அடித்து விடுவிக்கப்பெறல், இங்ங்னம் ஒரு ஆவணம் கூறுகிறது'. இன்னொரு வன் ரோந்து போகையில் ஒரு வீட்டில் திருடினான்; அவனுக்கும் பிரம்படி 12 கொடுக்கப்பட்டது". ஒருவன் செம்பு திருடினான்; அவன் கழுத்தில் செம்பைக் கட்டி, நான்கு வீதிகளிலும் சுற்றச்செய்து, ஒவ்வொரு வீதியிலும் 3 அடி கொடுக் கப்பட்டது , செம்புக் காரனுக்குச் செம்பு கொடுக்கப்பட்டது' இங்ங்னம் --- ==== - = 117. 5-288 118. ச.ம. மோ. க. 8-16. 119. 1-288 120, 2-256 - 121, 1-817 - 122, 1-189 124.4-888- هده , ,Ger , ...123