பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 திருட்டுக் குற்றத்துக்குப் பெண்களுக்கும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டம்ை புலனாகும். ஒருத்தி சாதம் திருடினாள்; அவளோ 3 தேங்காய் கொடுக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப் பட்டது'. - * --> _ - - - - - - – * - 를 - . அபராதம் வாங்குதல், அடிகள் அடித்தல், சிறை செய்தல், மராமத்து வேலை வாங்குதல் ஆகிய தண்டனைகளோடு, மேல்ே கண்டவண்ணம் தேங் காய்கள் அபராதமாக விதிக்கப்படுதலும் பரவலாகத் தெரியவருகிறது. . யுத்தசாலையினின்று தச்சன் வேலை முடித்துத் திரும்பி வந்து கொண் டிருந்தான். அவன்தன் ஆடையை உதறியபொழுது 24 டாங்க்" நிறையுள்ள பித்தளைத் தகடு கீழே விழுந்தது. வேலை செய்யும் இடத்தில் ஆடையை உதறாமல் அஜாக்கிரதையாய் வந்தமையால் அபராதம் ஆறு தோங்காய் விதிக் கப்பட்டது'. வண்ணான் வெளுத்த துணியில் முள் இருந்தமையால் அவனுக்கு அபராதம் 6 தேங்காய்'. காவலுக்குப் பகலில் மட்டும் அரிசி சாமான்கள் -கொடுக்க உத்தரவாகி இருந்தது; இாவிலும் சாமான்களைக் கொடுத்தமையால் தண்டனை 12 தேங்காய்".

- : சமையல் செய்ய 11 நாழிகைக்கு அரிசி தருக என்ற உத்தரவுக்கு ஏற்பக் கொடுக்காமல் காலம் கழித்துக் கொடுத்தமை தெரிவிக்காமல் இருந்தமையால் அவனுக்குத் தண்டனை 12 தேங்காய்கள்." * -

பெண்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பெற்றது. ஒரு ஆசிரியரின் மனைவி இன்னொரு ஆசிரியரின் குழந்தையை அடித்தாள். அவள் பார்ப்பனி சுமங்கலி ; ஆகையால் அவள் பின்னல் 4 விரற்கிடை அறுத்து, நெற்றியில் அடையாளம் செய்து, சிவப்புப்பூமாலை பேர்ட்டுக் கழுதையின் மேல் ஊர்வலம் வரச்செய்து விட்டுவிடுவது என்பது அவள் பெற்ற தண்டனையாகும்.' * * * * | " . . கோயிலில் விக்கிரகங்கள் களவுபோனால் அவற்றுக்குப்பூசைசெய்பவரும் பரிசாரகரும் பொறுப்புடையவராயினர்."


"ஒராசிரியர் மராட்டிய எழுத்துக்களைக் கற்பிப்பவர் அவர் தம் வீட்டுக் குச் சென்றார் ; விரைவில் திரும்பிவரவில்லை; பள்ளி மாணவர்கள் வெளியே வந்து சாக்கடையில் விழுந்து காயம் பட்டனர் ; இதனால் அவ்வாசிரியர்க்கு அபராதம் 6. பணம் விதிக்கப்பட்டது." - --- - --- ==

  • . சுகாதாரக்-கேடு விளைவிப்பவனுக்குக் கடுமையாகத் தண்டனை விதிக்கப்பட்டது. நாலு வீதிகளிலும் சாக்கடையில் மண்ணை உடனுக்குடன் எடுத்துச் சுத்தம் செய்யாமலிருந்தவனுக்கு ரூபா 6 அபராதம் விதிக்கப்பட்டது."

- 125, 1-178 126 டாங்க்-1 தாலா 2-126 127. 2–270 128. 1-282 129. ச. ம. மோ. க. 2-11 130. ச. ம. மோ. த. 2-11 131 ச. ம. மோ. த. 8-16 132, 12–152, 154 133. 1-256 134, 2-181