பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தண்டனை விதித்ததை மன்னித்து அவன் கொடுத்த அபராதத்தைத் - திருப்பிக் கொடுப்பதும் உண்டு என்பதற்கு ஒரு சான்று கிடைத்திருக்கிறது." ஒரு இந்துஸ்தானி பாடகன், தஞ்சாவூரில் அபராதம் விதிக்கப் பெற்றான் அவனை மன்னித்து அவன் கொடுத்த அபராதம் சக்கரம் 6: திருப்பிக் கொடுக்கலாம் என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமாணம் செய்யும்பொழுது அல்லது உறுதிமொழி கூறும்பொழுது சில முறைகளை அந்நாளில் கையாண்டுள்ளனர். அவற்றுள் ஒன்று, பிரமாணம் செய்கிறவர்கள்ை நெருப்புச் சட்டியை வெறுங்கையில் தூக்கச் செய்வது. இது ஓராவின்னத்தில் கூறப்பட்டுள்ளது. அது சரியன்று என்று கலெக்டர் கூறிய த்ாகவும் அவ்வாவணத்தில் காணப்பெறுகிறது." தெய்வ சன்னிதானத்தில் சத்தியம் செய்து தருகிறேன் என்று கூறுவதும் உண்டு"சி தாம் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினாலும் அபராதம் விதிக்கப்பெறுவதுண்டு. ஒருவன் முக்தாம்பாள் சத்திரத்துக்கு வேலைக்குப் போவதாகக் கூறிவிட்டுப் போகாமல் ஊரில் தங்கியமையால் தண்டனை ஆறு தேங்காய்கள் என்று ஓராவணக் குறிப்பினின்று அறியவருகிறது". சாதிக்கொடுமை அந்நாளில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தமையால் ஒரு சாதியினர் வேறொரு சாதியினர் கைச்சோறு உண்பது தவறாகக் கருதப் பட்டது. ஒருவன் கீழ்ப்பால் ஒருத்தியின் கைச்சோறு உண்டனன். அவன் பிராமணன்; ஆகையால் மீண்டும் உபநயனச்சடங்கு - முந்நூல் அணியும்சடங் குக்கு உட்படுத்தப்பட்டான் ; பிராயச்சித்தம் (வழுவாய் மருங்கின் கழுவாய் ) செய்து கொண்டான்; அரச தண்டனையும் அளிக்கப்பெற்றது". சாதியின் பேரால் சிலரைத் துன்புறுத்தியதும் உண்டு. அத்தகைய முறைகேடுகள் செய்தார் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். - ஒரு கன்னடியன் - பஞ்சு வஸ்தாது என்று பெயர்; அவன் " ஜாதிப்பிரஷ் டன் என்று அவனை வரிசையில் உட்காரவைத்துக்கொள்ளவில்லை. இது எலர்க்காருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஸ்ர்க்கார் கடுமையாகத் தண்டனை விதித்தது"அ. அந்நாளில் தீர்ப்புக்கூறியவர்கள் சரஸ்வதி பாண்டாரத்திலிருந்த சாத்தி ாம் வல்லாரைக் கேட்டு அறிந்து தீர்ப்பு வழங்கினர்; விஞ்ஞானேசுவரீயம் முதலான கிரந்தங்களைப் பார்த்துத் தீர்ப்பு வழங்கினர் என்று தெரிகிறது." சபாமஜ்கூர் என்ற தொடர் பல இடங்களில் வந்துள்ளது.' 135, 1–841 136, 2–60 136.அ. 9-140 137. ச. ம. மோ, த. 14-80 138. ச. ம. மோ. த. 7-80 138乌,4-258,259 139. ச. ம. மோ. க. 7-80; 8-820 - 1-288 140. 9-18, 45