பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கோயில் பணிகளும் சமயப் பொறையும் அல்லது சமயப் பொது நோக்கும் தஞ்சை மராட்டிய மன்னர்கள் தம் காலத்துக்கு முன்னிருந்த கோயில் களை நன்கு புரந்து வந்தனர்; சிலவற்றைத் தம் நேர்பார்வையில் வைத்துப் புரந்தனர்; சிலவற்றைப் புரந்து கொண்டிருந்தவரிடத்திலேயே விட்டுத் தாம் விரும்பியவண்ணம் உதவிகள் புரிந்தனர். பொதுவாக நோக்கின் அன்னோர் சிறந்த சிவ பக்தர்களாகத் திகழ்ந்தனர் என்னலாம்; எனினும் வைணவ சமயத் தையும் போற்றியேற்றுத் திருமால் வழிபாட்டிலும் ஈடுபாடுடையராய்ப் பல திருமால் கோயில்களைப் பாதுகாத்தனர்; பல புதிய கோயில்களையும் எடுப்பித் தனர்; சிலவற்றுக்குத் திருப்பணி புரிந்தனர். இவர்கள் காலத்தில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தப் பெற்ற திருக்கோயில்கள் பல. இவர்களின் உதவி யும் ஆதரவும் பெற்ற திருக்கோயில்கள் இவர்கள் ஆட்சிக்குட்பட்ட தஞ்ச்ை மாவட்டப் பகுதியிலேயே இருந்தன. இவ்வரசர்கள் தில்லைக்குச் செய்த திருப் பணியாக ஒரு ஆவணக்குறிப்பேடு உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயிலுக்குச் சில அறங்கள் செய்தது உண்டு. காசி யாத்திரைக்குப் பிறகு இரண்டாம் சரபோஜி வடநாட்டிலுள்ள பூரி ஜகன்னாதம் என்னும் திருத்தலத் துக்கு நாள் வழிபாட்டுக்கு ஆண்டுதோறும் தொகை அனுப்பிவந்தமை பல ஆவணங்களில் காணப்பெறுகிறது. இங்ங்ணம் சைவசிலராய்ச் சிவபக்தராய்த் திகழ்ந்த மராட்டிய மன்னர்களின் நேர் பார்வையில் இருந்த திருக்கோயில்கள் 64 என்று சகம் 1771 (கி. பி. 1849 ) க்குரிய ஆவணம் பகர்கின்றது. ஆ. 95 ,94 ,10-98 .ur. Guer, s, 1-10 ஆ ,... , ہو