பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருப்பழனம்' என்பது திருவையாற்றுக்கு அருகில் உள்ள சிவத்தலம். இந்தத் திருக்கோயிலில் நாடோறும் ஒரு கோதானம் கொடுக்கப்பட்டு வந்த தாகவும், அது நின்று விட்டது என்றும் 1813க்குரிய ஒரு ஆவணக்குறிப்பால் அறியப்பெறும்." கும்பகோணம் பல கோயில்களை உடையது. கும்பேசுவர சுவாமி கோயிலுக்குத் திங்கள் தோறும் 150 சக்கரம் மொயின்" அளிக்கப்பெற்றது: நாகேசுவர சுவாமி கோயிலுக்கு மாத மொயின் 83 சக்கரம், 3# பணம்: சாரங்கபாணி கோயிலுக்கும் மராட்டிய மன்னர் உதவி இருந்திருத்தல் வேண்டும். கும்பேசுவர சுவாமி மகாபிஷேக பூசைக்கு 10 சக்கரம் என்று 1801க்குரிய ஆவண்க குறிப்பு ஒன்று கூறுவதால் கும்பேசுவர சுவாமிக்கு அவ்வாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாதல் வேண்டும். ராஜஸம்பாபுரம்" ஐராவதேசுவர சுவாமி நித்தியப்படி மொயின் ஓராண்டுக்கு ரூ. 1811 என்று 1841க்குரிய ஒரு குறிப்பால் தெரிகிறது." இவ்வூர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. - - திருவிடைமருதூர் ஒரு சிறந்த சிவத்தலம் மத்தியார்ச்சுனம் என்று சொல்லப்பெறுவது , தல விருட்சம் மருது (தலை மருது - மல்லிகார்ச்சுனம்'நீசைலம்: இடைமருது - திருவிடைமருதூர் கடைமருது - புடார்ச்சுனம் திருப்புடைமருதூர், திருநெல்வேலி மாவட்டம்). இத் திருவிடைமருதூரில்தான் அமர்சிங்கு தன் இறுதி நாட்களைக் கழித்தார். இத் திருக்கோயிலுக்கு மர்ாட்டிய மன்னர் ஆதரவு இருந்தமை தெளிவு." - - - _திருபுவனம் கம்பஹரேசுவரர் திருக்கோயிலுக்கும் மராட்டிய மன்னர் ஆதரவு இருந்தது. திருபுவனத்தில் சரபமூர்த்திக்குத் தனிச் சிறப்பு உண்டு. அங்குச் சிறப்பு வழிபாடு செய்ததாக ஒரு ஆவணக் குறிப்புள்ளது. கி. பி. 1853இல் இரண்டாம் சிவாஜி காலத்திலேயே திருவிடைமருதூர் திருபுவனம் ஆகிய கோயில்கள் ( முறையே திருவாவடுதுறை, தருமபுரம்) திருமடங்களின் நேர் பார்வையில் வந்து விட்டன என்று அறியலாம்.' 84. திருப்பயணம் என்றுள்ளது 85 ச.ம. மோ த 1-84 86 ச. ம. போ. த.19-88 87. ச. ம. மேr. த. 19-88 88 - 2-8, 25 * 89. க. ம. மோ, க. 1-10 0. தாராசுரம் என்றவூர் ராஜஸ்ாம்பாபுரம் என்று அழைக்கப் பெற்றதாதல் வேண்டும். . ராஜஸாபாயி என்பவர் துளஜாவின் மாதேவி ஆவர் 3-144 gடி தாராசரத்துக்கோயில் இறைவன் பெய்ர் ஐராவதேசுவரர் என்பதாகும் 92. ச. ம. மோ. த. 8-92 93. 2-25 ச. ம. மோ, த. 12-6 5.8 94. ச. ம. மோ. த. 5-8 95. ச. ம. மேr. த. 20-8 96. ச. ம, மோ. த. 5-8