பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஒருபுறம் ஏழை மக்கள்: "ஒரு பணத்திற்கு 3 படி அரிசி விற்றாலும் அன்னம் அபருபமாக இருக்கிறது” என்று ஓராவணம்" கூறுகிறது. பிறிதொரு புறம், ரூ. 90,000, ராமையா செட்டியார் 7-8-1876இல் சக்காராம் அவர்கட்குக் கடன் கொடுத்துள்ளார்' என்று பிறிதோராவணம் கூறுகிறது. இங்ங்ணம் தனிப்பட்டவர் பெருந்தொகையைக் கடன் கொடுக்கும் அளவு பெருஞ்செல்வம் உடையராய் இருந்தமையும் தெரியவருகிறது. மராட்டிய அரசர்களுக்கு வேண்டும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்காகத் தொகையைக் கடன்கொடுத்த தமிழ் நாட்டவரும் உண்டு; வெள்ளையரும் உண்டு. 'தஞ்சாவூர் ஜனங்கள் ஏழைகள்; எங்கேயாவது சென்று பிராது செய்யக்கூட அவர்களுக்குச் செலவுக்கு இல்லை" என்று ஏழ்மையைப் பாடியவர்களும் இருந்தனர்." இத்தகைய "சமுதாயத்துச் செய்திகள் - வாழ்வு தாழ்வுகள் - இன்ப துன்பங்கள் - அருமை பெருமைகள் ஆகிய எல்லாக் கூறுகளையும் உள்ளது உள்ளவாறு அன்றாட நிகழ்ச்சிகளாக எழுதப்பெற்ற ஆவணங்கள் பல கட்டுக்களாகத் தஞ்சை சரஸ்வதிமகால் நூல் நிலையத்தில் உள்ளன. இவை மராட்டிய மொழியில்-மோடி எழுத்தில் எழுதப் பெற்றுள்ளன. மிகக் குறைந்த அளவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பெற்றவையும் கிடைக்கின்றன. அவற்றுள்ளும் 18ஆம் நூற்றாண்டின் முதற்பகுதிக்குரிய ஆவணங்கள் ஒன்று தானும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். தஞ்சை நவாபு ஆட்சியில் இருந்த காலத்தில் பல ஆவணங்கள் அழிக்கப்பெற்றமை இதற்குக் காரணம் என்பர். அழிந்தன - அழிக்கப் பட்டன போக எஞ்சிய ஆவணங்கள் இந்நூற்றாண்டில் 1952-53இல் வகைப்படுத்தப்பட்டன. அ ைவ, " A பகுதி நிலையாகக் காப்பாற்றற்குரியன; B பகுதி : எடுத்துக்காட்டாகப் போற்றற்குரியன; C பகுதி: வேண்டாதவை ; அழித்தற்குரியன” - என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றன. முதலிரு பகுதிகளும் சென்னை ஆவணக்காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பேணிக்காக்கப் படுகின்றன. C பகுதியே தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ளவை. அவ்வாவணங்களுள் சில மராட்டி மொழியில் எழுதப் பெற்று, அவற்றுள்ளும் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவை 11 தொகுதிகளாக உள்ளன. எஞ்சிய ஆவணங்கள் பற்றிய குறிப்புக்கள் 48 தொகுதிகளில் "மோடி ஆவணத் தமிழாக்கம்" என்ற பெயரில் காணப் பெறுகின்றன. தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் மோடி எழுத்துமுறை தெரிந்த ஒருவரைக் கொண்டு சில ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களின் இடையே சில தமிழ் ஆவணங்களும் கிடைத்தன. அவை படியெடுத்துக்கொள்ளப்பட்டன. இவை எல்லாவற்றின் துணைகொண்டு, அடுத்துவரும் பக்கங்களில் ' தஞ்சை மராட்டிய மன்னர் அரசியலும் அவர்கள் காலச் சமுதாய வாழ்க்கையும் ' என்ற தலைப்பில் தக்க ஆதாரங்களுடன் ஆய்ந்து பல தலைப்புக்களில் தரப்பெறுகிறது. б. 3—39, 40. 7. 6-197 முதல் 204 வரை. 3. 5-561. 9. இவற்றை Modi Bound Volumes என்ற பெயரால் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் குறிப்பிடுவர்.