பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பங்குனித் திங்கள் உத்திரநாளில் திருவிழா முடிவுறும் என்றும் விளக்கம் வந்தது." இதனால் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் 55 நாட்கள் நடந்த திருவிழா இந்நூற்றாண்டில் 30 நாட்கள் நடைபெறுகிறது என்பது போதரும். பந்தனைநல்லூர் என்பது பாடல்பெற்ற சிவத்தலம். அங்கு மராட்டிய மன்னர்தம் கோட்டையிருந்தது. அது திருப்பனந்தாட்கு அருகிலுள்ளது. அங்குக் கோயில் கொண்டிருக்கும் பசுபதீசுவரருக்கு ஒப்பந்தப்படி மொயின் கொடுக்கப்பெற்று வந்தது". திருவாப்பாங் என்பதும் திருப்பனந்தாளுக்கு அண்மையில் உள்ளது; பாடல் பெற்ற தலம்; சண்டேசப்பெருமான் தாபத மணலாற் கூப்பி ஆவின்பால் அபிஷேகம் செய்த தலம்; அதனால் இறைவன் பாலுகந்தநாதர்" ஆயினார்; ஐதர் படையெடுப்புக்கு முன்னரே திருவழா நடக்கவில்லை; அதனால் திருத் தேரும் பழுதடைந்து விட்டது: ஆகவே மன்னர் வழக்கமாக அளிக்கும் மொயி னுடன் தேரைப் பழுதுபார்த்து வைகாசிப் பெருவிழா நடத்துவதற்கு 100 சக்கரம் தருமாறு ஒருவேண்டுகோள் விடுக்கப்பெற்றது. இது கி. பி. 1789இல் நிகழ்ந்தது". - பட்டீச்சுரம் என்பது தாராசுரத்துக்கு அருகிலுள்ள ஒரு சிவத்தலம் ; இங்குக் கோயில் கொண்ட பெருமானுக்குப் பட்டிநாதர் என்பது பெயர் எனத். திருமுறைப் பதிப்புக்களில் காணப்படுகிறது. மோடி ஆவணக்குறிப்பில் தேனு புரீசுவரர் என்றுள்ளது. கி. பி. 1797இல் தேர்த்திருவிழா நடத்த ஒப்பந்தத் துக்கு மேல் 3 மாத மொயின் 65 சக்கரங்கள் கொடுக்கப்பட்டன". -: மன்னார்குடி என்பது ஒரு சிறந்த வைணவத்தலம். இத் திருக்கோயிலில் பங்குனித்திருவிழாவில் 7ஆவது திருநாள் மண்டகப்படி நடத்தப்பெற்றுவந்தது". ஜம்புகேசுவரம் என்பது திருவானைக்கா; திருச்சிக்கு அருகிலுள்ளதலம்; (பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம்): இறைவன் திருப்பெயர் ஜம்புகேசுவரர் என்று திருமுறைப் பதிப்புக்களில் காணப்பெறும். ஆனால் மோடி ஆவணக் குறிப்பில் ஜம்புநாதசுவாமி என்றிருக்கிறது. இத்திருக்கோயிலுக்கும் மொயின் ஆண்டொன்றுக்கு ரூ. 354-8-10 கொடுக்கப்பட்டு வந்தது". வைத்தீசுவரன்கோயில் வைத்தியநாத குடி என்று மோடி ஆவணக் குறிப்பில் காணப்படுகிறது (குடி-கோயில்). 1787க்குரிய ஆவணமொன்று இக் கோயிலுக்கு அமர்சிங்கு காலத்தில் ஆண்டுதோறும் 5400 சக்கரம் கொடுக்கப் H 103. விளக்கி எழுதியவர்கள் மேலே அடிக்குறிப்பு 100, 101இல் கண்ட உயர்திரு ஜி. ஆர்: தட்சிணாமூர்த்தி அவர்கள் ஆவர். _ _ * * 106. சி, Шд, மோ, தி, 5-46. 107. *Fн да மோ, திடி 20-6 +. --- ੋਂ 108. ச. ம. மோ. த. 19-18: 28-47 ; 109. ச. ம. மோ. க. 1-17; 18-20