பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 பெற்றதாகக் கூறுகிறது". 1814இல் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு 'ஆனந்த வல்லி" எனப் பெற்ற ஒரு யானைக்குட்டி கொடுக்கப்பெற்றது.' திருமயிலாடி என்பது கொள்ளிடம் புகைவண்டி நிலையத்துக்கு அடுத்த ரயிலடி. இங்குள்ள கோயில் ஏகோஜி காலம் முதற் கொண்டு இருந்த கோயில் என்றும், இதற்குக் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்றும், ஒரு விண்ணப்பம் உள்ளது; இது 1809க்குரியது.' o * -- - +. _ திருநள்ளாறு : இது ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று : சனிச்வர ருக்குரிய சிறந்த தலம்; இங்கும் 1766இல் திருத்தேர்த் திருவிழா நடை பெற்றது: , . - திருவண்ணாமலை இது பஞ்சபூதத்தலங்களுள் ஒன்று; இங்குக் கோயில் கொண்ட பெருமானுக்குக் கார்த்திகைத் திங்களில் நடைபெறும் பெருவிழா மிகச் சிறப்புடையது. இது பல ஆவணங்களில் குறிக்கப் பெறுகிறது.' திருப்பதிக்கு ஆண்டுதோறும் சப்பரம் எடுத்துச் சென்று திருப்பிக் கொண்டு வரப்பெற்றதாகப் பல குறிப்புக்கள் உண்டு.' இத்தலத் தொடர்பான செய்திகள் சில இரண்டாம் சரபோஜி தலயாத்திரை என்ற தலைப்பிற் காணலாம். - மதுரையில் அருள்மிகு சுந்தரேசப் பெருமானுக்கு நாகாபரணம் செய்ய 1852 சக்கரம் செலவு செய்யப்பெற்றது;" சுஹர்சன் ஆண்டு 1217இல் அளிக்கப் பெற்றது ' அதாவது கி. பி. 1816. இதுபற்றி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் அவர்கட்கு மடல் எழுதியபொழுது, ii. க.க . நாகாபரணத்தில் கீழ்க்கண்டபடி வடமொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வாசகத்தின்படி" மொழி பெயர்த்துப் பார்த்ததில் " தஞ்சாவூர் சத்ரபதி சரபோஜி மகாராஜா உபயம் சாலிவாகன சகம் 1739 ஈஸ்வர சம்வத்சரம் என்று உள்ளது ' - என்று பதில் வந்தது. சகம் 1739 என்பதுடன் 78 ஆண்டுகள் சேர்ப்பின் ஆங்கில ஆண்டு வரும். சகம் 1739 என்பது கி. பி. 1817 ஆகும். எனவே 1816-17இல் மதுரை அருள்மிகு சுந்தரேசுவரர் கோயிலுக்கு நாகாபரணம் அளிக்கப்பெற்றது என்று கருதலாம். 110. 3-178 111. 2-259. 112, 4-860 113. ச. ம. மோ. த. 15-8 114. ச. ம. மோ. த. 19-42 115. ச. ம. மோ. த. 28-48. 116. 5-308 117. சுஹர்ஸன் ஆண்டுடன் 599 சேர்த்தால் ஆங்கில ஆண்டு வரும் - - 118. கஞ்சாவூரசே சத்ரபதி சரபோஜி மஹாராஜயாஞ்சே உபயம் சாலிவாஹன சக 1789 ஸே ஈச்வர ஸம்.வத்சர " - இங்ங்ணம் படியெடுத்து அனுப்பிய செயல் அலுவலர் அவர்கட்கு நன்றி. o - 26