பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மதுரையில் மீன்ாட்சியம்மனுக்குத் திருவாசலுக்குத்தங்க முலாம் செய்து கொடுத்ததாக ஒரு குறிப்பு உள்ளது;" காலம் தெரியவில்லை. - - திருவரங்கம் அரங்கநாதப் பெருமானுக்கு ஆண்டுதோறும் அரண்மனை யிலிருந்து அகண்ட தீபம், துளசியருச்சனை, நைவேத்தியம் ஆகியவை நடந்து வந்தனவாதல் வேண்டும்." - - - - - - - - = r இராமேசுவரம் மராட்டிய மன்னர்தம் கொடைகள் பலவற்றைப் பெற் றிருத்தல் வேண்டும். 1779இல் இராமேசுவரத்தில் அருள்மிகு இராமநாதப் பெருமானுக்கு வில்வர்ர்ச்சனை செய்யவும், கோதண்டராமசுவாமிக்குத் துளசி யருச்சனைக்குமாக 380சக்கரங்கள் செலவு செய்யப்பெற்றன". அவ்வப்பொழுது மன்னர்கள், இராமேசுவர யாத்திரை செய்தனர்; சத்திரங்களில் உணவு அளித்தனர்; பலருக்கும் யாத்திரை செய்ய உதவி அளித்தனர். வடநாட்டுத் தலங்களுள் பூரி ஜகந்நாதம்" என்ற தலத்தில் ஜகந்நாத சுவாமிக்கு நாடோறும் நிவேதனம் செய்ய ஆண்டுதோறும் ரூ. 800 அனுப்பப் பெற்றுவந்தது. 30-1-1821க்குரிய குறிப்பினால்' நாடோறும் ரூ. 2 செலவில் இறைவனுக்கு நிவேதனம் செய்து அந்த நிவேதனத்தைக் குருடர் முடவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும், 30-1-1821லேயே கோயில் முதன்மை அலுவலரிடம் ரூ. 720 கொடுக்கப் பெற்றது எனவும், 12 பானைகள் சோறும் பருப்பும் காய்கறிகளும் நிவேதிக்க வேண்டும் என்று திட்டம் வகுக்கப் பெற்றது எனவும் தெரிகிறது. - - - --- திருப்பனந்தாள் பூரீ காசிமடத்துக்குத் தலைமை இட்மாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் காசிமாநகரம் திகழ்ந்தது. அங்குள்ள மடத்துக்குக் குமார சுவாமி மடம் என்பது பெயர். மராட்டிய மன்னர் காசியில் செய்ய வேண்டிய அறப்பணிகள் எல்லாவற்றையும் காசிமடத்து அதிபர்களே முன்னின்று நடத்தி வந்தனர் என்று தெரிகிறது. காசிமடத்து அதிபர்கள் "காசித் தம்பிரான்'என்றே மோடி ஆவணங்களில் குறிக்கப்பெற்றுள்ளனர். மராட்டிய மன்னர்கள் காசித் தம்பிரான் அவர்களிடம் கொண்ட தொடர்புகள் பற்றி " மடங்களும் மராட்டிய மன்னர்களும் ' என்ற தலைப்பில் (31) விரிவாகக் கூறப்பெறும். சரபோஜி மன்னர் 1820-22இல் காசியாத்திரை மேற்கொண்டு காசித் தம்பிரான் மடத்தில்' தங்கியிருந்தார். கி. பி.1851இல் காசியில் கேதார கட்டத்திலுள்ள அருள்மிகு கேதாரிசுவரர் கோயிலில் விளக்கு ஏற்ற 70,000 திரிகளை ஆவுசாயேப்மன் 119. 6-98 120. 6-98 ; st sér 90 (Ls. 42) The Great Temple at Tanjore by J. M. S. அகண்டதீபம் ஏற்றுவதற்குரிய ஒரு பாவுைவிளக்கு திருவரங்கக் கோயிலில் இருப்பதாகக் கஞ்சை அரண்மனை மூத்த இளவரசர் ராஜேழரீ ராஜாராம் ராஜா சாஹேப் அவர்கள் கூறுகிறார்கன். " 121, 5–8 122. சரபோஜி IIஇன் காசிப் பயணம்-பார்க்க 123. 4.429, 480; ச. ம. மோ. த. 9-10 ; 9-88 124. ச. ம. மோ. க. 0-181 125. இரண்டாம் சரபோஜியின் மனைவி; சிவாஜி IIன் தாய் ஆகலாம்