பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Չ04 மராட்டிய மன்னர் சைவ வைணவ ஆலயங்களுக்கு வேறுபாடின்றி உதவி வந்தமையும் புரந்து வந்தமையும் இதுகாறும் கூறியவற்றான் நன்கு அறியப்பெறும். _* இரண்டாம் சரபோஜி காலத்தில் நீலகண்ட குலால நாடகம் போன்ற நூல்கள் சிவனடியார்கள் பற்றி எழுந்தபோதிலும், சைவநாயன்மார் வழிபாடு பற்றித் தெளிவாகக்கூறும் மோடி ஆவணக் குறிப்பு யாதொன்றும் கிடைக்க வில்லை. எனினும் பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் பற்றி ஒரு குறிப்புள்ளது. அது: "திரிணகிரி கல்யாண ரங்கநாதர் திருமங்கையாழ்வார் கார்த்திகை மாசம் உற்சவம் துவஜாரோகணம் குதிரை வாகனம் புஷ்ய தேர்த் தீர்த்தவாரி முதலான உத்ஸவ விவரங்கள் ' என்பதாகும். இதில் திருணகிரி என்பது சீர்காழிக்கு அண்மையிலுள்ள திருவாலி திரு நகரி என்ற வைணவத் தலமாகும். இத்திருநகரியில்தான் திருமங்கையாழ்வர்ர் தோன்றினார். கார்த்திகை மாசத்தில் கார்த்திகை விண்மீன் திருமங்கை "யாழ்வாரின் பிறந்த நாள்மீனாகும். இவ்வாழ்வாரின் திருநாள் திருநகரியில் நடத்தப்பெற்றது. "--, - மிகுந்த தெய்வ நம்பிக்கையும் பற்றும் உடையவராய் இருந்தமையின் மராட்டியர்கள் இறைவனுக்கு அர்ச்சனைகள் சிறப்புறச் செய்வித்தனர். பெரிய கோயில் சுவாமிக்கு லக்ஷம் எருக்கம்பூ கொங்கனேசுவர சுவாமி 'கோயிலில் க்னிசுவரருக்கு இல்க்ஷம் செம்பர்த்தம்பூ ரீபிரதாப வீர அனுமாருக்கு இலக்ஷம் துளசி ; இங்ங்னம் பல." - . வந்தனர். அருள்மிகு பிரஹதீசுவரருக்கு 1779இல் பூத வாகன மண்டகப்படி நடத்தியவர் திரெளபதிபாயி ஆவர்; யானை வாகன மண்டகப்படி நடத்தியவர் ராஜஸ்பாயி; விருஷப வாகன மண்டகப்படி நடத்தியவர் ராஜகுமாராபாயி. இவர்களுள் திரெளபதிபாயி பிரதாபசிங்கின் மனைவியாவர்; மற்ற இருவரும் பிரதாயசிங்கின் மகன் ஆகிய துளஜாவின் மனைவியர் ஆவர்'. ---- - - - - - - - கோயில்களைப் பரம்பரையாகப் பரிபாலனம் செய்யும் உரிமையுடைய் வர் ஸ்தானிகர்' எனப்பெறுவர். இத்தகைய தானிகர் சில கோயில்களுக்கு இருந்தனர் எனத் தெரியவருகிறது:- ---> * - " பிரகதீஸ்வரர் கோயில் ஸ்தானிகர் ஆறுமுகம் பிள்ளை' ' * : கீழவாசல் சிங்கப்பெருமாள் கோயில் ஸ்தானிகர் கோபாலய்யங்கார் FM 143 " கருந்தட்டான்குடி கோயில் ஸ்தானிகர் கொடுத்த மனு' என்பன இதனை வலியுறுத்தும். -- - - to ; 166 ,2-165 .140 7-9 كم . ITمG ، ما . بي.139 141. போன்ஸ்லே வம்ச சரித்திரம், (தமிழ்) பக்கம் 7; 125; 109 . . 142. ச. ம. மோ. க. -ே9 143, 6-106 - 144. 5-488