பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆட்சிப் பரப்பும் உட்பிரிவுகளும் தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிபுரிந்த நிலப்பகுதி இந்நாளைய தஞ்சை மாவட்டம் என்று கூறின் பொருந்தும். கொள்ளிடம் இவர்களின் ஆட்சிப்பரப்புக்கு இயற்கையாக வடக்கின்கண் அமைந்துவிட்டது. கிழக்கே கடல் கொள்ளிடம் கடலில் கலக்கும் இடத்தில் அமைந்த தேவிகோட்டை முதல் தெற்கே பாம்பாறு கடலில் கலக்கிற இடம்வரையில் உள்ள கடற்கரை இவர்கட்குரியது. மேற்கே திருச்சி புதுக்கோட்டை அரசுகளும், தெற்கே இராமநாதபுரம் அரசுக்குரிய ஆட்சிப் பகுதியும் எல்லைகளாக அமைந்தன. இவர்களுடைய நாடு காவிரி பல கால்களாய் ஓடி வளம் பெருக்குவது நெல் விளைவுக்குக் குறைவில்லை. தமக்குப் போதிய அளவுக்குமேல் மிகுதியானவை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கரும்பும் பருத்தியும் இந்நாட்டில் பயிரிட்டனர். தென்னந்தோப்புக்களும் மாந்தோப்புக் களும் நிறைய உண்டு. மாடுகள் நிறைய வளர்க்கப்பட்டன. சில இடங் களிலேதான் சிறு காடுகள் இருந்தனவாதல் வேண்டும். இந் நா ட் டி ல் சோழர்கள் காலத்திலேயே வானளாவிய கோயில்கள் இருந்தன. கடற்கரை யோரங்களில் உப்பளங்கள் நிறையவுண்டு. அங்கு மீன் பிடித்தலும், முத்துக் குளித்தலும் பெரும்பான்மையான தொழில்களாம். இத்தகைய வளம்பொருந்திய நிலப்பகுதியை மராட்டிய மன்னர் 5 பிரிவுகளாகப் பிரித்து ஆட்சிபுரிந்தனர். ஒவ்வொரு பிரிவும் " சுபா " எனப்பெறும். அவ்வைந்து சுபாக்கள் ஆவன: பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மாயூரம், திருவாதி (திருவையாறு) என்பனவாம். ஒவ்வொரு சுபாவும் சீமைகளாகவும், ஒவ்வொரு சீமையும் மாகாணங்களாகவும் பிரிக்கப்