பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அல்லா வைக்கிற இடத்தில் ஹிந்துஸ்தானி சேவை செய்வதற்கு டக்காவின் ஜோடியொன்றைத் தயார்செய்ய" என்ற ஆவணக் குறிப்பாலும்" அரண்மனை யில் அப்தார்கானாவில் ஒரல்லா வைக்கப்பட்டிருந்தமை போதரும். இதில் முன்னது 1852க்கும் பின்னது 1825க்குமுரியது. பின்னதில் " ஹிந்துஸ்தானி சேவை செய்தற்கு டக்காவின் ஜோடி யொன்று ' என்பதும் சிந்திக்கத்தகுவது. அல்லா வைக்கிற இடத்தில் இந்துஸ்தானி மொழியில் ஃபக்கீர் வழிபாடு செய்வர் என்றும், அப்பொழுது டக்கா எனும் இசைக்கருவி அடிக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது. '1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு...... உற்சவத்துக்காகச் சர்க்காரி லிருந்து மூடுகிற வஸ்திரத்தை வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 20' என்ற குறிப்பால் நாகூர் தர்காவுக்குத் திருவிழாக்காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பிவந்தனர் என்பது போதரும் "அ. மக்கான்தார்களுக்கும் ' துணியாதார்களுக்கும் ' வேறுபாட்டுணர்ச்சி யேற்படுவதுண்டு. அவர்கள் தம் வழக்கை அரசரிடம் முறையிடுவர். இத்தகைய வழக்கொன்று கூறும் ஆவணம் மோடிப்பலகணியில்" உள்ளது. அல்லா ஊர் வலத்துக்கு அரண்மனையிலிருந்து எடுபிடிகளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது". நாகூர் காதிர் சாயேப் தர்காவுக்கு நகரா வாத்தியம் செய்து அளிக்கப்பட்டது". அல்லாவைத் திருவிழா 9ஆம் நாளில் ஊர்வலம் செய்வ தற்கு கி. பி. 1834இல் தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத்தந்தத்தேர் பெரியது, சிறியது, சங்கீதத்தேர் ஆக ஐந்து தேர்கள் வழங்கப்பெற்றன". இங்ங்னம் அல்லாப்பண்டிகை காலத்தில் நன்கொடைகளும் தேர் முதலியனவும் அளித்து முகமதிய சமயத்தாரின் நன்மதிப்பையும் ஆதரவையும் மராட்டிய மன்னர் பெற்றிருந்தனர். அரசர் ஆதரவு பெற்றிருந்தபோதிலும் மக்களுக்குள் வேறுபாட்டுணர்ச்சி நிலவாமல் இல்லை. ஓரிரு சமயங்களில் சச்சரவுகள் நிகழ்ந்தனவாதல் வேண்டும். கி. பி. 1769: கும்பகோணத்தில் காவேரியின் கரையில் ஒரு துலுக்கர் பிள்ளையார் சதுர்த்தி தினம் கற்களை எறிந்ததனால் ஒரு பிராமணனுடைய தலை உடைந்து அபாயம் நேரிடும்படியாக இருந்ததனால் அவருக்கு அபராதம் 9 பனம் 'ே - என்ற குறிப்பினால் சிறு சச்சரவுகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அரசு தண்டனை விதித்தது என்றும் அறியப்பெறும். 191. 4-448 191.அ. 2-277 192. மேற்பார்வையாளர் "க _ * = -- 181 வரை 193 எதிரிகள் ; சமயப்பற்றில்லாதவர் 194. 8-171 முதல் - 195. 2–260, 861 196. 2–271 197. 1-287, 288 . 198. 3-29